ஹாலிவுட் நடிகரும் பாடகருமான டெமி லவ்வாட்டோ தனது ரசிகர்களுக்காக புதிய ரக செக்ஸ் டாய்ஸ்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அனைவருக்கும் செக்ஸில் மகிழ்ச்சி அடைய உரிமை உண்டு என்கிறார் அவர்.  பனிக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் பொதுவாகவே செக்ஸ் டாய்ஸ்கள் விற்பனை மேற்கத்திய நாடுகளில் அதிகரிக்கும். அதனால் பிரபலங்கள் பலர் தங்களது பிராண்ட் செக்ஸ் டாய்ஸ்கள் மற்றும் செக்ஸ் தொடர்பான விற்பனைப் பொருட்களை இந்த சமயத்தில் மார்க்கெட்டிங் செய்வது உண்டு. 






செக்ஸ் டாய்ஸ்கள் என்றால் என்ன? 


செக்ஸ் டாய்ஸ்கள் என்றால் இங்கே பலருக்கு ஜப்பானில் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் செக்ஸ் பொம்மைகள்தான் அதிக பட்சமாகத் தெரியும்.அதனால் செக்ஸ் டாய்ஸ்கள் பற்றிய விழிப்புணர்வு செக்ஸ் பற்றிய விழுப்புணர்வைப் போலவே சற்று குறைவுதான். அதுவும் லாக்டவுன் சமயத்தில் தங்களது பார்ட்னர்களைப் பிரிந்து வெவ்வேறு துருவங்களில் இருந்த பலருக்கு மீட்பராக இருந்தது இந்த செக்ஸ் டாய்ஸ்கள்தான். 


பொதுவாக உடலுறவில் பார்ட்னர்கள் இருவரில் ஒருவருக்கு ஒருவர் தரும் கிளர்ச்சியை உச்சத்தை இந்த செக்ஸ் டாய்ஸ்கள் மாஸ்ட்ரூபேஷன் வழியாகக் கொடுக்கும், அல்லது உடலுறவு போரடிக்கும் கட்டத்தை எட்டுபவர்கள் தங்களிடையே இந்த செக்ஸ் டாய்ஸ்களை உபயோகப்படுத்தலாம். உடலுறவில் பெரும்பாலான பார்ட்னர்களுக்கு செக்ஸ் டாய்ஸ் உபயோகிப்பது புதிய அனுபவமாக இருந்தாலும் சிலருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம் அதனால் உபயோகிப்பதற்கு முன்பு பார்ட்னரிடம் சம்மதத்தைப் பெற வேண்டியது முக்கியம். 


என்னென்ன வகை இருக்கின்றன: 


வைப்ரேட்டர்


பெண்ணுறுப்புகளுக்காகவே தயாரிக்கப்படும் வைப்ரேட்டர்களில் கையடக்கம் முதல் கை நீளம் வரை எனப் பல வகைகள் இருக்கின்றன. கையடக்க வைப்ரேட்டர்கள் பெரும்பாலும் முட்டை வடிவத்தில் இருக்கும். இவை பெண்ணுறுப்பில் வெளிப்புறமாக மட்டும் பயன்படுத்தக் கூடியவை. குறிப்பாக ஜி-ஸ்பாட் எனப்படும் உச்சமடையச் செய்யும் பகுதியில் இதைப் பயன்படுத்தலாம். 


மற்றொரு வகை பாகற்காய் போன்ற வடிவத்தில் உள்ளங்கை நீளத்துக்கு இருக்கும். இவை பெரும்பாலும் பெண்ணுறுப்பில் உட்புறமாகவும் பயன்படுத்தக் கூடியது.  


ரிங் மற்றும் ஸக்‌ஷன்


சிலிக்கானில் தயாரிக்கப்படும் ரிங் சிறிய வளைய வடிவில் இருக்கும். பெரும்பாலும் ஆணுறுப்பில் பயன்படுத்தப்படுபவை. இதனை ஆணுறுப்பில் பொருத்துவதில் அதன் வேகத்துக்கு ஏற்பப் கிளர்ச்சி ஏற்படத் தொடங்கும். மூன்றாவது வகையான ஸக்‌ஷன் ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு என இரண்டிலும் பயன்படுத்தலாம். இவை பிறப்புறுப்பின் சதைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கிளர்ச்சியைத் தூண்டும்.

இவை தவிர...


வாசனைத் திரவியங்கள் போன்று விற்கப்படும் லூப்ரிகண்ட்கள், ஆல் இன் ஒன் செக்ஸ் டாய்கள், செயற்கை ஆணுறுப்பு, செயற்கை பெண்ணுறுப்பு எனப் பல வகை செக்ஸ் டாய்ஸ்கள் சந்தையில் உள்ளன.  


பயன்படுத்துவதில் கவனிக்க வேண்டியவை


செக்ஸ் டாய்ஸ்கள் வாங்குவதற்கு முன்பு அதனைப் பயன்படுத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் படித்துவிட்டு உங்களுக்கு ஏற்ற செக்ஸ் டாய்ஸ்களை வாங்குவது நல்லது. நம்மூரில் புதிதாகத் திருமணமான அல்லது  ஜோடிகளுக்கு புதுவிதமாக கிப்ட் என்ன தருவது என யோசிப்பவர்கள் இதனை வாங்கித் தரலாம். செக்ஸ் டாய்ஸ் வாங்குவதற்கு முன்பு உங்கள் டாக்டரிடம் ஒருமுறை பரிந்துரை பெறுவது நல்லது. சிலருக்கு அது தயாரிக்கப்படும் மெட்டீரியலில் ஒவ்வாமை ஏற்படலாம், சிலருக்கு இந்த வகை டாய்ஸ்கள் உடல் ரீதியாக சரிவராததாக இருக்கலாம், சிலருக்கு மாஸ்ட்ரூபேஷன் செய்வதே உடல் ரீதியான உபாதை ஏற்படுத்துவதாக இருக்கலாம். இவர்கள் அனைவருமே முதலில் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.