ஹுண்டாய் நிறுவனத்தின் முக்கிய மாடலான க்ரிட்டா அதிகளவில் விற்கப்பட்டு வருகிறது. க்ரிட்டா மாடலின் சில வேரியண்ட்களுக்காக சுமார் 6 முதல் 9 மாதங்கள் வரை காத்திருக்கும் நிலையும் தற்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே ஹுண்டாய் நிறுவனம் தற்போது புதிய க்ரிட்டா மாடல் எதனையும் வெளியிடப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்தது. எனினும், அடுத்த ஆண்டு க்ரிட்டா மாடலை அறிமுகப்படுத்தி இரண்டாவது ஆண்டு என்பதால், இதே மாடலின் முகப்புப் பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது. 


இந்தப் புதிய க்ரிட்டா மாடல் இந்தோனேசியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹுண்டாய் டுஸ்கான் மாடலின் முகப்பைப் போல இந்த மாடலின் முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. `Parametric Hidden Lights’ என்று அழைக்கப்படும் சிறப்பம்சம் கொண்ட முன்பக்க விளக்குகள் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளன. 



பகலில் எரியும் விளக்குகளின் கீழாக இந்த மாடலின் ஹெட்லாம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தின் வடிவமைப்பும் மாற்றப்பட்டு, அளவில் சற்றே பெரிய டெய்ல் லாம்ப்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் விற்கப்படும் க்ரிட்டா மாடலுடன் ஒப்பிடுகையில், இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் க்ரிட்டா இன்னும் ஷார்ப்பாகவும், அதிக ஸ்போர்ட்ஸ் லுக் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள க்ரிட்டா புதிய மாடல் இதே மாற்றங்களோடு இருக்குமா என்ற தகவல்களும் உறுதிசெய்யப்படவில்லை. எனினும், இந்த மாடலின் வடிவமைப்புக்கு மிக நெருக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பிற மாடல்களை விட முகப்பில் சற்றே மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ள ஹுண்டாய் க்ரிட்டா மாடல் இன்னும் அதிகமாக கவர்ந்து இழுக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. MG Astor, மஹிந்த்ரா XUV700 ஆகிய மாடல்களைப் போல, புதிதாக வெளியிடப்படவுள்ள க்ரிட்டா மாடலில் ADAS சிறப்பம்சங்களை ஹுண்டாய் நிறுவனம் சேர்ப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன. தற்போதைய க்ரிட்டா மாடலில், அதிகம் பாராட்டுகளைப் பெற்ற சிறப்பம்சங்களான 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன், பேனராமிக் சன் ரூஃப் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி, கூல்ட் சீட் சிறப்பம்சம் முதலானவை புதிய மாடல் க்ரிட்டா கார்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின்களைப் பொருத்தவரை, முந்தைய மாடலைப் போல இதிலும் 1.5 லிட்டர் டீசல், 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய என்ஜின்கள் வெவ்வேறு வேரியண்ட்களாக அளிக்கப்படுகின்றன. 



 


பெட்ரோல் வேரியண்டாக விற்பனை செய்யப்படும் க்ரிட்டா மாடல்களில் டர்போ என்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் DCT சிறப்பம்சமும், 1.5 லிட்டர் மாடல் வேரியண்டில் CVT என்ற சிறப்பம்சமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இருக்கும் க்ரிட்டா மாடலுக்கே அதிக ஆர்டர்கள் குவிந்து வருகையில், ஹுண்டாய் நிறுவனம் மிக விரைவில் இந்த மாடலை அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் இல்லை என்ற போதும், அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 


Car loan Information:

Calculate Car Loan EMI