நாம் உண்ணும் உணவுகளும் பற்களின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. மிட்டாய்கள் உள்ளிட்ட இனிப்புகள், இனிப்பு பானங்கள் உள்ளிட்ட சர்க்கரை கலந்த உணவுகள் பற்சிதைவை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. வாய் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவு முக்கியமானது. உணவில் உள்ள ஊட்டச்சத்து உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் உடனடி விளைவை ஏற்படுத்துகிறது. மோசமான ஊட்டச்சத்து பல் சிதைவு, துவாரங்கள் மற்றும் ஈறு நோய் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும் என சொல்லப்படுகிறது.
1.பாலாடைக்கட்டி:
பாலாடைக்கட்டியை சாப்பிடுவது பற்களுக்கு நல்லது. சீஸ் உட்கொள்வது வாயில் உள்ள pH ஐ உயர்த்துகிறது மற்றும் பல் சிதைவு அபாயத்தைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது. பாலாடைக்கட்டி வாயில் உள்ள உமிழ்நீரை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பாலாடைக்கட்டியில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் பற்களுக்கு வலிமையை வழங்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
2. கீரை, பச்சை காய்கறிகள்:
கீரை உடலுக்கு மிகவும் நல்லது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கீரை வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது.
3. ஆப்பிள்கள்:
ஆப்பிள் அதிக நீர் மற்றும் நார்ச்சத்து கொண்டவை. ஒரு ஆப்பிளை சாப்பிடுவது உங்கள் வாயில் உமிழ்நீரை சுரக்க உதகிறது இப்பழத்தில் உள்ள நார்ச்சத்தானது ஈறு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
4. தயிர்:
பாலாடைக்கட்டியைப் போலவே, தயிரிலும் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது, இது உங்கள் பற்களின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தயிரில் காணப்படும் புரோபயாடிக்குகள் அல்லது பயனுள்ள பாக்டீரியாக்கள், உங்கள் ஈறுகளுக்கு நன்மை பயக்கும். சர்க்கரை சேர்க்காத தயிரை உட்கொள்ளுதல் நல்லது என கூறப்படுகிறது.
5. கேரட்:
கேரட் ஆப்பிளைப் போலவே,நார்ச்சத்து நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு உணவிற்கும் பிறகு பல கேரட்களை பச்சையாக சாப்பிடுவது உங்கள் வாயில் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இவை பற்களுக்கு நல்லது. கேரட் வைட்டமின் ஏ-யின் கணிசமான ஆதாரமாக உள்ளது. கேரட் சால்ட் செய்து சாப்பிடலாம்.
6. பாதாம்:
பாதாம் உங்கள் பற்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவை கால்சியம் மற்றும் புரதச் சத்து நிறைந்தது. உங்கள் மதிய உணவோடு ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை சாப்பிடலாம். மேலும் இரவு உணவில் ஒரு பிடி பாதாம் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க