இட்லி, நம் அன்றாட வாழ்வில் ஒன்றிபோய்விட்ட ஒரு உணவு பொருள். நீராவியில் வேகவைத்து செய்யப்படுவதால் மிகவும் ஆரோக்கியமான உணவு என்ற பெயரும் இதற்கு உண்டு. இட்லியும் சாம்பாரும் சரிவிகித உணவு என்ற பெருமைக்கு சொந்தகார்ர்கள். தென் இந்தியாவில் அதிகமாக அறிப்பட்ட இட்லி. இன்று உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் என்றும், இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக் என்றும் கூறப்படுகிறது. பரபரப்பான காலை நேரத்தில் சத்துமிக்க காலை உணவு என்றால் அது இட்லிதான். சரி, இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என உங்களுக்கு தோன்றுமில்லையா? இன்று உலக இட்லி தினமாம். வாங்க கொண்டாடலாம். இட்லி தினத்தில் வகை வகையான இட்லி செய்து சாப்பிட்டு கொண்டாலாம்.



இட்லியை உண்ணும் முறை


ஒரு உணவாக இட்லி மிகவும் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் ஆரோக்கியமான விஷயமாகவும் இருக்கிறது. இது பாரம்பரியமாக அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரைத்த பின்பு புளிக்க வைத்துப் பயன்படுத்தப் படுகிறது. இட்லியின் அமைப்பு மட்டுமல்ல, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் கலவையின் விளைவாக இட்லியில் இருந்து வரும் முழுமையான புரதமும் அதை மகத்தான உணவாக மாற்றுகிறது. இட்லி என்பது நாம் அடிக்கடி காணும் உணவென்பதால் அதன் அருமையை நம்மில் பலர் உணர்ந்திரவில்லை. இட்லியின் ஐந்து குணநலன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.


தொடர்புடைய செய்திகள்: Prakash Raj : இந்தியாவைக் காப்பாற்ற விரும்பும் எல்லா வீடும், ராகுல் காந்தியின் வீடுதான்: பிரகாஷ் ராஜ்


எடை இழப்பு


இட்லி குறைந்த கலோரிகளைக் கொண்ட ஒரு லேசான பஃபி டிஷ், எனவே எடை இழப்புக்கு நல்லது. புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி இருக்கவும், இடைப்பட்ட உணவின் பசியை குறைக்கவும் உதவுகிறது.


நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து


இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும், பருப்பால் ஆனது என்பதால், இரும்புச்சத்தும் நிறைந்துள்ளது.


சத்துக்களை உறிஞ்சும் தன்மை


முதல் தர புரதங்கள் உடலுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் வழங்குகின்றன, இதனால் சத்துக்களை நன்றாக உறிஞ்சும் தன்மையை வழங்குகிறது.



புரதம் நிறைந்தது


முதல் தர புரதங்கள் விலங்கு மூலங்களில் இருந்து வந்து உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை வழங்கி, சத்துக்களை நன்றாக உறிஞ்சும் தன்மையை வழங்குகிறது. இரண்டாம் தர புரதங்கள் தாவர மூலங்களிலிருந்து வரும் சில அமினோ அமிலங்கள் இல்லாதவை. தானியங்கள் மற்றும் பருப்புகளில் தனித்தனியாக சில அமினோ அமிலங்கள் இல்லாததால், அவை இரண்டாம் தர புரதங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இட்லியைப் போலவே, ஒரு கலவையாக எடுத்துக் கொள்ளும்போது, தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் பெறப்பட்டு, அது முதல் வகுப்பு புரதத்திற்குச் சமமான புரதத்தை தருகிறது என்று உணவு ஆரோக்கிய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது


நொதித்தல் செயல்முறையின் காரணமாக, இட்லி புரோபயாடிக்குகளின் நல்ல மூலமாகும், இது ஒருவரின் குடல் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்கிறது. புரோபயாடிக்குகள் நேரடி நுண்ணுயிரிகளாகும், அவை சிறந்த செரிமான ஆரோக்கியம் முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச்சத்துக்களை மேம்படுத்துதல் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது.