உலக நீரிழிவு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. முதன்முதலில் 1991ஆம் ஆண்டு சர்வதேச நீரிழிவு அறக்கட்டளை, உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த தினம் அனுசரிக்கப்படத் தொடங்கியது.
கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது ஏற்படும் ஒரு நாள்பட்ட வியாதியே நீரிழிவு நோய். நீரிழிவு நோய் பற்றிய கல்வி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இதனை எவ்வாறு எதிர்கொள்வது ஆகியவற்றை குறிக்கோள்களாகக் கொண்டு, “நீரிழிவு சிகிச்சைக்கான அணுகல்” எனும் கருப்பொருள் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க அதனைத் தொடர்ந்து கவனித்து வருவதும், சிகிச்சை அளிப்பதும் முக்கியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலருக்கு இதனைச் செய்வதில்லை. இருப்பினும் சில உணவுகள் மூலம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்
மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் அத்தியாவசிய வைட்டமின்களும் தாதுக்களும் அடங்கியுள்ள நிலையில், ரத்த சர்க்கரை அளவை சீராக்கி உங்களுக்கு முழு வயிறு சாப்பிட்ட உணர்வைத் தரும்.
ஆஸ்பர்கஸ், பட்டர் ஃப்ரூட், முட்டைக்கோஸ், செலரி, வெள்ளரிகள், பச்சை பீன்ஸ், காளான்கள், வெங்காயம், தக்காளி, ஸூக்கினி ஆகியவை இதில் அடங்கும். சர்க்கரையின் சரியான அளவு மற்றும் அதிக நார்ச்சத்தை இந்தக் காய்கறிகள் கொண்டுள்ளன.
அதே போல் உறைய வைக்கப்பட்ட காய்கறி உணவுகளைத் தேர்வுசெய்தாலும் உப்பு அல்லது சாஸ் சேர்க்காத உணவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கொழுப்பு நிறைந்த மீன்
நீரிழிவு நோயாளிகள் கடல் உணவை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஒமேகா-3, உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைப் பெற கொழுப்பு நிறைந்த மீன் உணவுகள் உதவும்.
நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய சிக்கல்களில் இருந்து இதயத்தைப் பாதுகாக்க இந்த உணவுகள் இன்றியமையாதவை.
கொட்டை, விதை உணவுகள்
கொட்டை உணவுகள் பொதுவாக அதிக நார்ச்சத்து கொண்டவை. மேலும், இவற்றில் எளிதில் செரிமானமாகக்கூடிய குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
பாதாம், பிரேசில் பருப்புகள், முந்திரி, ஹேசல்நட், மக்காடமியா நட்ஸ், பெக்கன்கள் (pecans), பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம்.
இவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் உணவில் சியா விதைகள் மற்றும் ஆளிவிதைகளை சேர்க்கவும். சியா விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவு. ஆளிவிதைகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
ஆப்பிள் சைடர் வினிகர்
தோல் மற்றும் முடிக்கு நன்மை தருவதோடு இவற்றில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க இது உதவும். பொதுவாக ஆப்பிள் சைடர் வினிகரை நேரடியாக உட்கொள்ளும்போது பற்கள் மற்றும் உணவுக்குழாய் சேதமடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் எப்போதும் தண்ணீரில் கலந்து அருந்துங்கள்.
ஸ்ட்ராபெர்ரிகள்
ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின் சி, மெக்னீசியம் ஆகியவை அதிகம். இது கொலஸ்ட்ரால் மற்றும் இன்சுலின் அளவைக் குறைக்க உதவும். ஆனால் முக்கியமான விஷயம் எப்போதும் ஸ்ட்ராபெர்ரிக்களை அளவாக உண்ண வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்பது உண்மையல்ல, அளவுக்கு அதிகமாக இனிப்பு உட்கொண்டு, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடாது