உலகம் முழுவது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. தற்போது உருமாறிய ஒமிக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக மீண்டும் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் மக்கள் அதிகமாக புதிது புதிதாக சில உணவு பொருட்களை சமைத்து பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய வகை உணவு பொருளை சமைத்து பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. ஏனென்றால் அந்த உணவின் பெயரே பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுவே அந்த வீடியோ வைரலாக காரணமாக அமைந்துள்ளது. அந்த உணவிற்கு அவர் ‘கொரோனா வடை’ என்று பெயர் வைத்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் எப்படி இந்த கொரோனா வடையை செய்வது என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை அளித்துள்ளார். அதில் வழக்கமாக வடை செய்வது போல் வடை ஒன்றை தயாரிக்கிறார். அதன்பின்னர் கொரோனா வைரஸ் வடிவத்தை அதற்கு தர அவர் வேக வைத்த சோற்றை பயன்படுத்துகிறார். அதன்பின்னர் அந்த வடையை அதற்குள் வைத்து ஸ்டஃபிங் செய்கிறார். இறுதியில் அந்த வடை பார்க்க கொரோனா வைரஸ் வடிவத்தை பெறுகிறது.
இவ்வாறு இந்த வடை தொடர்பாக பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஊட்டச்சத்து தரும் உளுந்தங்களி.. பதமா, பக்குவமா செய்வது எப்படி?