இட்லி தமிழ்நாட்டில் அதிகம் உண்ணப்படும் உணவு என்றாலும் உலகம் முழுவதுமே இட்லி பிரபலமான உணவாக உள்ளது. குழந்தை முதல் முதியவர் வரை நோயாளிகள் உள்பட அனைவருக்கும் உகந்த உணவு இட்லி.


தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால், அதில் புரதங்களின் இருப்புத்தன்மை அதிகமாகும் மற்றும் வைட்டமின் பி சத்தின் அளவு மேம்பட்டு இருக்கும்.


புரோபயாட்டிக் சத்தை கொண்டிருக்கிறது. இயற்கையாகவே மாவை புளிக்க வைத்து குடலில் நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் இட்லியை சத்துள்ள உணவாக பரிந்துரைத்துள்ளது. ஊட்டச்சத்து உணவுகள் குறித்த அமைப்புகள் பலவும் இட்லியை சிறந்த உணவாக பரிந்துரை செய்துள்ளது. முழுமையான காலை உணவாக இட்லியை சொல்கிறது.






ஒரு இட்லியில் கலோரிகள் 65, புரதம் 2 கிராம், நார்ச்சத்து 2 கிராம், கார்போஹைட்ரேட் 8 கிராம் உள்ளது. இதில் கொழுப்புச்சத்து இல்லை.இட்லி மிக மிக அற்புதமான உணவு. ஆனால் எப்போது இட்லி மாவை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் போது. அவசரக்காலங்களில் எப்போதாவது வெளி இடங்களில் கிடைக்கும் இட்லி மாவை வாங்கி பயன்படுத்தலாம். வீட்டில் தயாரிக்கும் போதுதான் அது புளிக்க எந்தவிதமான கெமிக்கலும் சேர்க்காமல் தயாரிப்போம்.


இங்கே இட்லியை ஒரு பெண் வித்தியாசமாக செய்துள்ளார். அவர் இட்லியை சங்கு பூ தண்ணீர் சேர்த்து செய்துள்ளார். அதாவது சில சங்குப்பூக்களை எடுத்து அதனை தண்ணீரில் போட்டு மூடிவைத்து கொதிக்க விடுகிறார். பின்னர் அதனை வடிகட்டி அந்தத் தண்ணீரை இட்லி மாவில் சேர்க்கிறார். இட்லி கரைசல் ரெடியானதும் அதை தட்டில் ஊற்றி இட்லி செய்கிறார். வேகவைத்த பின்னர் அழகான நீல நிற இட்லி கிடைக்கிறது. இதுபோல் கேரட், பீட்ரூட், புதினா மல்லி என பல நிறங்களில் இட்லி செய்யலாம். சிலர் செம்பருத்திப்பூ சாறு எடுத்தும் இட்லி செய்வதுண்டு.