நம் அன்றாட சமையலில் தவறாமல் இடம்பெறுவது புளி. புளிப்பு சுவைக்காக பலராலும் விரும்பப்படுகிறது. புளி குழம்பு, ரசம் என்று கேட்டாலே நாவில் சுவை கூடும். ஆனால், அளவுக்கு அதிகமாக புளி எடுத்துகொள்வது உடல்நிலைக்கு கேடு ஏற்படும். புளி உடல் சூட்டை அதிகரிக்கும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.


தினமும் 10 கிராமிற்கு அதிகமாக புளி சாப்பிடுவது உடல்நலனுக்கு ஆரோக்கியமில்லை என்கின்றனர் நிபுணர்கள். 


பல் எனாமல் தேய்மானம்:


நாம் புளியை சமையலில் மட்டும் பயன்படுத்துவதில்லை. பாத்திரங்கள் தேய்கவும் பயன்படுத்துவோம் என்பது நினைவிருக்கும். இதில் உள்ள புளிப்புத் தன்மை, அமில தன்மையால், அதிகமாக புளியை சமையலில் சேர்த்துக்கொண்டால், பற்களின் எனாமல் தேய்ந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.


அலர்ஜி:







குடலில் ஆசிட் அளவை அதிகருக்கும். புளியில் அதிக அளவு ஆசிட் இருக்கிறது. இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே, உணவில் அளவுடன் புளி சேர்த்துக்கொள்வது நல்லது.


உடல் சார்ந்த உபாதைகளுக்கு மருந்துகள் எடுத்துகொள்பவர்கள், புளியை உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது. இது இரத்த செல்கள் குறைவதற்கு வழிவகுக்கும்.


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புளி அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.


அதிக புளிப்பு கல்லீரல், பித்தப்பை தொடர்பான பிரச்னைகளை உண்டாக்கும்.


கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் புளிப்பு சுவையுள்ள உணவை அதிகம் சாப்பிடுவர். இந்தக் காலத்தில் தாய், சேய் என இருவருக்கும் சேர்த்து வேலை செய்வதால், தன்னை சரிப்படுத்திக்கொள்ள புளிப்பு சுவையைக் கேட்கிறது. அவர்களும் கொஞ்சம் கம்மியாக புளிப்பு சுவை உள்ளவற்றை சாப்பிடலாம்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண