உலர் திராட்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் திராட்சையில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது. இது தூக்கம்-விழிப்பு சுழற்சியை முறையாக கட்டுப்படுத்த உதவுகிறது.


உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிகம் கொண்ட உணவாக அறியப்படுகிறது. இது நம் உடலில் உள்ள உப்பு உள்ளடக்கத்தை சமன் செய்யும்.


நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள். மேலும், உலர் திராட்சை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது.


தண்ணீரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் 3 நன்மைகள்:


1. நச்சுக்களை நீக்கும்
உலர் திராட்சை கலந்த நீரை அருந்தினால் மாசு, பதப்படுத்தப்பட்ட உணவு, மன அழுத்தம் ஆகியனவற்றின் காரணத்தால் ஏற்பட்ட உடல் நச்சை நீக்கும்.
உலர் திராட்சைத் தண்ணீரானது உடலில் உள்ள நச்சை அகற்றி இயற்கையான டீடாக்ஸிஃபயராக இருக்கும்.


2. உடல் எடையைக் குறைக்க உதவும்
உலர் திராட்சையானது உடல் எடையைக் குறைக்க உதவும். இது பிஞ்சே உணவு உட்கொள்ளுதலைக் குறைக்கும். நன்றாக ஊற வைத்த உலர் திராட்சைகள் டயட் இருக்கும்போது ஏற்படும் ஃபுட் கிரேவிங்ஸைத் தடுக்கும். உங்கள் உணவில் உள்ள கலோரிக்களின் அளவைக் குறைக்கும்.


3. ரத்த சோகையைத் தடுக்கும்.
இரும்புச் சத்துக் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக ஏற்படும். எனவே திராட்சை தண்ணீர் அருந்திவந்தால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும். இதனால் ரத்த சோகை நீங்கும்.


தயிருடன் உலர் திராட்சை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?


தயிர், உலர் திராட்சை என இரண்டிலும் கால்சியம் உள்ளது. இவற்றை இணைத்து சாப்பிடும்போது ஆஸ்டியோபோரோஸிஸ் நோய் வரும் அபாயம் உள்ளவர்களுக்கு அது தவிர்க்கப்படும். எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். இதனால் எலும்புகள் வலுப்பெறும்.


மூட்டுகளுக்கும் வலு சேர்க்கும்..


உலர் திராட்சைகள் எப்படி மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் என்று பார்ப்போம். தயிர் மற்றும் உலர் திராட்சையை சேர்க்கும் போது முக்கியமான அவசியமான தாதுக்கள் உள்ளன. அதனால் இவற்றை சேர்த்து உண்ணும்போது மூட்டுகள் வலுப்பெறும்.


இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் இவ்வாறு கூறியிருப்பார். தயிர் ப்ரோபயாடிக்காகவும், உலர் திராட்சைகள் அதன் கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்தால் ப்ரீபயாடிக்காக வேலை செய்யும். ப்ரோபயாடிக், ப்ரீபயாடிக் என்ற இரண்டும் இணையும்போது அவை குடலில் உள்ள அழற்சியை நீக்கி நல்ல பாக்டீரியக்கள் வளரச் செய்யும். அதனால் மூட்டுக்கள் வலுப்பெறுவதோடு பல், ஈறுகளும் வலுவாகும்.