Idli Weight Loss : இந்த இட்லிகள் எடைகுறைக்க உதவி செய்யுமா? வாவ்! இதை கொஞ்சம் படிங்க..

தென்னிந்தியாவை பொறுத்தவரை இட்லி அனைவருக்கும் விருப்பமான காலை உணவாக இருந்து வருகிறது. இதனை காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, பொடி இட்லி, தயிர் இட்லி, தக்காளி இட்லி, இட்லி மஞ்சூரியன் வரை அசத்தமுடியும்

Continues below advertisement

தென்னிந்தியாவை பொறுத்தவரை இட்லி அனைவருக்கும் விருப்பமான காலை உணவாக இருந்து வருகிறது. இதனை காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, பொடி இட்லி, தயிர் இட்லி, தக்காளி இட்லி, இட்லி மஞ்சூரியன், வெந்தய இட்லி, கோதுமை இட்லி, ராகி இட்லி என ஒரே மாவில் பல வெரைட்டிகளில் செய்து அசத்த முடியும். 

Continues below advertisement

இன்றைய தலைமுறையுனருக்குச் சலித்துப்போய்விட்ட ஓர் உணவான இட்லி, அக்காலத்தில் ஏழைகள் பலருக்கும் எட்டாக்கனி போன்ற உணவு. பண்டிகை நேரங்களில் மட்டுமே வீட்டில் செய்யக்கூடிய உணவாகவும் இருந்தது.

உலகச் சுகாதார நிறுவனத்தின் ‘ஊட்டச்சத்து நிறைந்த உயர்ந்த உணவு வகைகள்’  பட்டியலில், இட்லிக்கு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 30ஆம் தேதி, ‘இட்லி தினம்’ கொண்டாடப்படுகிறது.

இட்லியில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது.இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும்  உதவும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருப்பவராயிருந்தால், இட்லி ஒரு சரியான தேர்வாக இருக்கும். இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைவாக வைத்திருப்பதனால், அதீத பசியைத் தடுக்கும். ஜிம்களில் பல மணிநேரம் செலவழித்து, உண்ணாவிரதம் இருந்து உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராக நீங்கள் இருந்தால், இட்லிகளை உங்கள் நண்பனாக்கிக்கொள்ள வேண்டிய நேரம் இது.

ஓட்ஸ் இட்லி

ஓட்ஸில் வைட்டமின் நிறைவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இவை வயிற்றை நீண்ட நேரம் பசியின்மையுடன் வைத்து அடிக்கடி ஏற்படும் பசி தாக்கத்திலிருந்து விடுவிக்கிறது. ஓட்ஸை நன்றாக அரைத்து அதை இட்லி மாவுடன் சேர்த்து வார்த்தால் போதும். இந்த லைட்டான பஞ்சு மாதிரியான இட்லிக்கள் உங்கள் நாளை நிறைவாக்கும்.

பீட்ரூட் இட்லி:

பீட்ரூட் இட்லியை செய்ய பீட்ருட்டை அரைத்டு அதன் சாற்றை கெட்டியான மாவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். இது பிங் நிறத்தில் அழகாக இருக்கும். இதில் நிறைய சத்துக்கள் உள்ளன.  இது ரத்த சிவப்பு அணுக்களை சரி செய்யவும், சீராக செயல்படவும் உதவுகிறது. மேலும் இது உடலுக்கு ஆற்றலையும், சுறுசுறுப்பையும் கொடுக்க கூடியது. சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும், அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்தவும் பீட்ரூட் உதவுகிறது.

கேரட் இட்லி:

இட்லி மாவுடன் கொஞ்சம் கேரட் துருவல் சேர்த்து தட்டில் ஊற்றி எடுத்தால் அதுதான் கேரட் இட்லி. இன்னும் கலர்ஃபுல்லாக வேண்டும் என்றால் கொஞ்சம் பீட்ரூட் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். 

சுரைக்காய் இட்லி

கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இந்த புடலங்காய் இட்லியானது சுவையிலும் ஊட்டச்சத்திலும் சளைத்தது அல்ல. இது அதீத பசியைத் தடுப்பதோடு உடல் எடையைக் குறைப்பதிலும் உதவுகிறது. புடலங்காயைக் கண்டு ஓடும் குழந்தைகளிடம் இது புடலங்காய் இட்லி என சொல்லாமலே கொடுத்து சாப்பிடவைப்பது நல்லது!

முளைக்கட்டிய பயறு இட்லி

இந்த இட்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான ஊட்டமிகு உணவாகும். முளைக்கட்டிய பயறு இட்லி உடல் எடையைக் குறைக்க உதவும். இதை ஆம்லெட் மற்றும் சாலடுகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இத்துடன் சாம்பார் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
 

Continues below advertisement