தோசை மாவை சரியான விகிதத்தில் அரைத்து எடுத்துக்கொண்டாலே போதும் கடைகளில் இருப்பது போல மொறு மொறுன்னு வீட்டிலேயே தோசை செய்ய முடியும். அதற்கு இந்த டிப்ஸ்களை கொஞ்சம் பாலோ பண்ண மறந்திடாதீர்கள்..
தென்னிந்திய உணவு பட்டியல்களில் முக்கிய இடம் வகிப்பது தோசை தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடக்கூடிய தோசை மொறு மொறுன்னு வேண்டும் என்று தான் கேட்பார்கள். ஆனால் சில நேரங்களில் சாதாரண தோசைக்கூட சுடமுடியாது. இதற்கு சரியானப் பதத்தில் மாவை அரைக்காதது முக்கியமான காரணமாக உள்ளது. எனவே உங்களின் தோசை மாவின் நிலைத்தன்மை மற்றும் பதத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
தோசை மாவை வைத்து மொறு மொறுன்னு தோசை செய்ய வேண்டும் என்றால் முதலில் நீங்கள் சரியான விகிதத்தில் உளுத்தம் பருப்பு மற்றும் அரசியை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இவ்வாறு செய்ய பழகுங்கள். நான்கு கப் அரிசி மற்றும் ஒரு கப் உளுத்தம் பருப்பை எடுத்து சுமார் 4 மணி நேரம் அல்லது ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் உளுந்து மற்றும் அரிசியை சரியான நிலைத்தன்மைக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தானியங்களை ஊற வைக்கும் பாத்திரம் சிறியதை விட பெரிய கிண்ணத்தில் அல்லது கொள்கலனில் வைக்கவும். மேலும் நாம் ஊற வைக்கும் தானியங்களுக்கு போதுமான இடம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாவின் நிலைத்தன்மை உறுதிப்படுத்தவும்: உங்களது தோசை மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது மெல்லியதாகவே இருக்கக்கூடாது. நம்முடைய கரண்டியில் மாவு ஒட்டாமல் இருப்பதை சரிப்பார்த்துக்கொள்ளவும்.
நாம் அரைக்கும் மாவு எட்டு முதல் பத்து மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். ஒரு வேளை உங்களது வீடு குளிர்ச்சியான இடத்தில் இருக்கிறது என்றால் சுமார் 12-15 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். வெயில் காலத்தில் சூரிய ஒளியில் சுமார் 6 மணி நேரத்தில் நொதித்தல் அடையும். குளிர்சாதனப் பெட்டியில் விரைவில் மாவு புளிக்காது என்பதால், சிறிது நேரம் வெளியில் வைத்தப்பின்னர், மீண்டும் பிரிட்ஜில் வைக்க வேண்டும். உங்களது தோசை மாவை அறை வெப்பநிலையில் மட்டுமே வைக்க வேண்டும்.
மேலும் நீங்கள் அரைக்கும் தோசை மாவில், ஆமணக்கு விதை, அவுல் சேர்த்து அரைக்கலாம். இவ்வாறு அரைக்கும் மாவில் நீங்கள் தோசையோ அல்லது இட்லியோ செய்யும் போது ரொம்ப மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். எனவே மேற்கண்ட வழிமுறைப்பின்பற்றி உங்களது தோசை மாவை அரைத்து அனைவருக்கும் பிடித்தமான மொறு மொறு தோசை மற்றும் மிருதுவான இட்லியை செய்யலாம்.