பானிபூரி பிடிக்காதவரா நீங்கள்.. அப்படியென்றால் இதைப் படிக்காமல் அப்படியே ஜகா வாங்கிக் கொள்ளலாம். இது பியூர் பானிபூரியன்ஸுக்கான செய்தி.
இந்தியாவில் இண்டு இடுக்குவரை பேமஸாக உள்ள ஒரு ஸ்ட்ரீட் ஃபுட் என்றால் அது பானி பூரி தான். இதற்கு மொழி, மாநிலம், இடம் என எதுவுமே தடை இல்லை.
ஒரு தள்ளுவண்டி இருந்தால் சுகாதாரமாக சுவையாக பானி பூரி சட்னி, ரசம், உருளை மசியல் செய்யத் தெரிந்தால், அதை கைகளில் கிளவுஸ் போட்டு சுத்தமாக பரிமாறத் தெரிந்தால் உங்களை அந்த ஏரியாவில் யாராலும் அசைத்துக் கொள்ள முடியாது.
சரி எதற்கு இந்தப் பீடிகை எனக் கேட்கிறீர்களா? சூரத் நகரில் ஒரு பானிபூரி வியாபாரி தயாரிக்கும் ட்விஸ்ட் ரெஸிபிக்கு சும்மா லைக்ஸ் எல்லாம் அள்ளுது அதனால்தான் இந்தப் பீடிகை.
முதலில் வீடியோ..
இன்ஸ்டாகிராம் லிங்கில் வீடியோ பார்த்துவிட்டீர்களா ஃபுட்டீஸ். நீங்களே சொல்லுங்க பானிபூரியை ரசத்தில் ஊறவிட்டு இனிப்பு புளிப்பு நீரில் மிதக்கவிட்டு உள்ளே உருளை மசாலுடன் சாப்பிடுவது ஒரு வகை என்றால், இப்படி எல்லாவற்றையும் இடித்து கலந்துகட்டி சாப்பிடுவது ஒரு வகை ருசி தானே..
பானிபூரி வெறியர்கள் சிலர் என்ன செய்கிறார் இவர் எனக் கொந்தளிக்கலாம். கோபம் வேண்டாம் பாஸ். நீங்கள் பூரியை குளிப்பாட்டி தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தால் உங்களுக்கு ஓல்ட் ஸ்டைலிலேயே தருவாராம். நீங்கள் அதை சுவைத்து ஓல்ட் இஸ் கோல்ட் என்று உச்சு கொட்டலாம்.
இல்லை ஐ ஆம் ட்ரெண்டி என்று சொன்னால் அண்ணனோட ட்ரெண்டுக்கு ஏற்ப இந்த வால்கானிக் பானி பூரி வாங்கி சாப்பிடுங்க.