தங்கள் குடும்பத்தினரையும் அன்புக்குரியவர்களைக் கவனிப்பதில் பெண்கள் பலர் தங்கள் நலனைப் புறக்கணித்து, தேவையற்ற உடல்நலப் பிரச்சனைகளை வரவழைத்துக் கொள்ளுகிறார்கள். ஒரு பெண்ணின் உடல் ஆணின் உடலை விட அதிக sensitiveஇருப்பதால் பெண்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.
பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஐந்து வகை உணவுகளைப் பற்றி அறிவோம்.
நானாவதி மேக்ஸ் முருத்துவமனையின் தலைமை உணவு நிபுணர் டாக்டர் ராசிகா மதூர், ஓர் பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதால் அவருக்கு ஏற்படவிருக்கும் நோய் பலவற்றையும் தவிர்க்கலாம் என்கிறார்.
1) காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்கள்:
டாக்டர் ராசிகா மாதூரின் கூற்றுப்படி, பச்சைக் காய்கறிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாப்பதால் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. பெண்கள் அனைவரும், தினமும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வகையான பிக்மெண்ட் நிறைந்த வண்ணமையமான காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். புளூபெர்ரி, ஸ்ட்ராபெரி, ஜாமூன், திராட்சை, ஆரஞ்சு, கிவி போன்ற சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சிறந்து செயலாற்றுகிறது.
2) சாலட்
சேலட்களில் அதிகளவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சேர்க்கப்படுகிறது. செரிமான அமைப்புக்கு உதவும் நார்ச்சத்து நமக்கு வேறு பல நன்மைகளையும் பயக்கும். குடல் ஆரோக்கியமாக இருப்பதால், மூளையும் சிறப்பாக செயல்படுகிறது. மேலும், நார்ச்சத்து ஆரோக்கியமற்ற உணவின் மோசமான விளைவுகளையும் உடம்பில் இருந்து நீக்குகிறது.
3) நட்ஸ்
பெண்களும் ஆண்களும் உயிரியல் ரீதியாக வித்தியாசமானவர்கள் . பெண்கள் ஆண்களை விட அதிகளவில் விதைகளை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. இவற்றில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூசணி, ஆளி விதை, ராகி, ஜோவர் மற்றும் தினை ஆகியவற்றிலிருந்து ஒரு விதையை ஒவ்வொரு நாளும் சாப்பிடுமாறு அனைத்து பெண்களுக்கும் நன்மை பயப்பதாகிறது.
4) பால் மற்றும் பால் ரீதியான பொருட்கள்
டாக்டர் ராசிகா மதூர் மேலும் ”நம் அனைவருக்கும் தினசரி அதிகபட்ச புரதம் தேவைப்படுகிறது. முக்கியமாக பால் பொருட்கள் ஒருவரின் உணவில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். நம் உணவில் பால், தயிர் அல்லது மோர் உள்ளிட்ட மாற்றுப் பொருட்கள் உணவில் புரதத்திற்கு ஆதாரமாக திகழ்கிறது. மேலும், பாலுக்கு பதிலாக, ஓரளவு சம அளவிலான ஊட்டச்சத்து தரும் பருப்பும் சாப்பிடலாம்
5) பருப்புகள்
முக்கியமான பருப்பு வகையான நட்ஸ் வகையின் நன்மைகள் நாம் அறிந்தவையே. குறிப்பாக பாதாம பருப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாம், வால்நட்கள், ஆப்ரிகாட்கள், உலர்ந்த பேரீச்சம்பழம் அல்லது பேரீச்சம்பழம் போன்றவற்றை சாப்பிடுவது, பல நோய்களுக்கு எதிராக போராட நம் உடலை திடப்படுத்த உதவுகிறது