ஆப்பிள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பழம் ஆகும். அவை பொதுவாக சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். ஆப்பிள்கள் சதைப்பற்றுடன்  இனிப்பு அல்லது புளிப்பு சுவை கொண்டவையாக இருக்கும்.  ஆப்பிள்கள் இந்தியாவில் பிரபலமான பழமாக  உள்ளன. 


இந்தியாவில் பல்வேறு வகையான ஆப்பிள்கள் வளர்க்கப்படுகின்றன.  சிம்லா ஆப்பிள், காஷ்மீரி ஆப்பிள் மற்றும் ஹிமாச்சல் ஆப்பிள்  உள்ளிட்ட ஆப்பிள்கள் உள்ளன. இந்த வகைகள் பொதுவாக இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீர் போன்ற பகுதிகளில் பயிரிடப்படுகின்றன.


7 வகையான ஆப்பிள்கள் மற்றும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.


1.சிவப்பு ஆப்பிள் :


இந்த ஆப்பிள் வகை அடர் சிவப்பு நிறம் மற்றும் சற்று இனிப்பு சுவை கொண்டவை. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடண்ட்டுகள் நிறைந்துள்ளன. இந்த வகை ஆப்பிள்களை தவறாமல் உட்கொள்வது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என கூறப்படுகிறது.


2. கோல்டன் ஆப்பிள் :


கோல்டன் வகை ஆப்பிள்கள் இனிப்பு மற்றும் சற்று புளிப்பு சுவை கொண்டது. இவை குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டவை. இவை எடை மேலாண்மை மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கான சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஆப்பிளில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது.


3. கிரானி ஸ்மித் ஆப்பிள்கள்:


கிரானி ஸ்மித் ஆப்பிள்கள் அவற்றின் புளிப்பு சுவை மற்றும் பச்சை நிறத்திற்கு பிரபலமானவை. இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆப்பிள்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுவதாக கூறப்படுகிறது. 


4. காலா:


காலா ஆப்பிள்கள் மிருதுவாக இருக்கும்.  நல்ல இனிப்பு சுவை கொண்டவை. இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. காலா ஆப்பிளை தவறாமல் உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என சொல்லப்படுகிறது.


5. புஜி:


புஜி ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள்  நிரம்பியுள்ளன. இந்த ஆப்பிள்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.


6. பிங்க் லேடி:


பிங்க் லேடி ஆப்பிள்கள், இனிப்பு மற்றும் கசப்பான சுவைக்கு பெயர் பெற்றவை. இவற்றில்,  நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன.  பிங்க் லேடி ஆப்பிள்கள் உடல் எடையை கட்டுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான குடலை மேம்படுத்தவும் உதவும் என கூறப்படுகிறது.


7. ராயல் காலா:


ராயல் காலா ஆப்பிள்கள், மிருதுவாக இருக்கும்.  இனிப்பு சுவை கொண்டது. இவற்றில்,  நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. ராயல் காலா ஆப்பிளின் வழக்கமான நுகர்வு நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதாக சொல்லப்படுகின்றன.