மேகி என்பது ஒரு உணவு மட்டுமல்ல, அது ஒரு எமோஷன். பலருக்கும் எளிதில் கடந்து செல்ல முடியாத விஷயங்களில் ஒன்றாகும். என்னதான் இதன் அடிப்படை, சைனா, கொரியாவாக இருந்தாலும் இந்தியாவிலும் பல ஆண்டுகளாக நாம் சப்பிட்டுதான் வருகிறோம். பள்ளி காலங்களில் பலருக்கு எளிதான காலை உணவாக அது இருந்திருக்கும். நாம் மேகியை விரும்புவதற்கு காரணம், அதன் பிரத்யேக மசாலாவும், அதனை எளிதாக, விரைவாக செய்ய முடிவதும்தான்.


எப்போதுமே மேகி பலருக்கு ஃபேவரைட் என்றாலும், மழை நேரத்தில் சிறந்த சிற்றுண்டியாக அது இருக்கிறது. சிற்றுண்டிகள் தேவைப்படும் நேரத்தில், புதிதாக என்ன செய்யலாம் என்று யோசித்து, யோசித்து சோர்வடைந்து இருந்தால், மேகியை வித்தியாசமாக செய்ய இருக்கிறது நிறைய ஐடியா!


அதில் முக்கியமான 3 ரெசிபிகள் இங்கே;







பர்ன்ட் கார்லிக் மேகி


தேவையான பொருட்கள்:


1 டீஸ்பூன் எண்ணெய்


1 டீஸ்பூன் பூண்டு


1 டேபிள்ஸ்பூன் வெங்காயம் மற்றும் ஸ்பிரிங் ஆணியன்


1 பகுதி வேகவைத்த மேகி


தேவையான அளவு உப்பு & மிளகு


1 டீஸ்பூன் சோயா சாஸ்


1/2 டீஸ்பூன் வினிகர்


செய்முறை:



  • ஒரு பாத்திரத்தில் வறுத்த பூண்டை தயார் செய்து, ஒதுக்கி வைக்கவும்.

  • அதே கடாயில், அனைத்து பொருட்களையும் வதக்கி, மேகியுடன் இணைக்கவும்.

  • மேலே வறுத்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் தூவி இறக்கவும்.


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI: மேற்கிந்திய தீவுகளை பொட்டலம் கட்டிய இந்தியா, அஸ்வின் மாயாஜாலம்..! இன்னிங்ஸ் & 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி



மஞ்சோ மேகி


தேவையான பொருட்கள்:


1 டீஸ்பூன் எண்ணெய்


1 டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு


1 கப் காய்கறிகள்


3 கப் தண்ணீர்


1 டேபிள்ஸ்பூன் டார்க் சோயா சாஸ்


1 டீஸ்பூன் ரெட் சில்லி சாஸ்


1 டீஸ்பூன் வினிகர்


தேவையான அளவு உப்பு & மிளகு


1 மேகி டேஸ்ட்மேக்கர்


2 டேபிள்ஸ்பூன் சோளமாவு கலவை (1 டீஸ்பூன் சோளமாவு 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கலக்கப்பட்டது)


1 பாக்கெட் மேகி


செய்முறை:



  • கடாயில் அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து, தண்ணீர் ஒரு கொதி நிலைக்கு வரும் வரை வேக வைக்கவும்.

  • ஒரு முறை சுவையை சோதனை செய்து, தேவைப்பட்டால் எந்த சாஸ் வேண்டுமோ சேர்த்து சரிசெய்யவும்.

  • சூடாக பரிமாறவும்.



டெசி மசாலா மேகி


தேவையான பொருட்கள்:


1 டீஸ்பூன் எண்ணெய்


1 டீஸ்பூன் சீரகம் 


1 வெங்காயம்


1 தக்காளி


தேவையான அளவு உப்பு


1/2 டீஸ்பூன் மஞ்சள்


1 டீஸ்பூன் மல்லி தூள்


1 டீஸ்பூன் மிளகாய் தூள்


1 டீஸ்பூன் மேகி மேஜிக் மசாலா


தண்ணீர்


2 பாக்கெட் மேகி


2 மேகி டேஸ்ட்மேக்கர் பாக்கெட்டுகள்


1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி


செய்முறை:



  • அனைத்து காய்கறிகளையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அவற்றை முழுமையாக வதக்கவும்.

  • அடுத்து, மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

  • பிறகு மேகியை சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்.

  • இது நீங்கள் விரும்பும் நிலைத்தன்மைக்கு வரும் வரை வேகலாம்.

  • இறுதியாக சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.