யுகாதி என்ற சொல் சமஸ்கிருத வார்த்தைகளான யுகா (வயது) மற்றும் ஆதி (ஆரம்பம்) என்பதிலிருந்து உருவானது, அதாவது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது பொருளாகும். இது இந்து சந்திர நாட்காட்டி மாதமான சைத்ராவின் முதல் நாளில் அனுசரிக்கப்படுகிறது, இது கிரிகோரியன் நாட்காட்டியின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வருகிறது. இந்த நாளில்தான் பிரம்மா பூமியின் பகுதிகளை உருவாக்கத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. 


ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே நாள் மகாராஷ்டிராவில் ’குடி பட்வா’ என்ற பெயரில் கொண்டாப்படுகிறது. மேலும், வட இந்திய மாநிலங்களில் வழக்கமாகக் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின் தொடக்கமாகவும் இப்பண்டிகை நாள் குறிக்கப்படுகிறது.


ஒடிசாவில் இது  ‘பனா சங்ராந்தியாக’ அழைக்கப்படுகிறது.  மேற்கு வங்கத்தில், ‘பொய்லா  பாய்சாக்’ புதிய ஆண்டில் தொடங்குகிறது  மற்றும் அசாமில், ‘போஹாக் பிஹூ’ புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. பெயர்கள் வேறுபடுகின்றன ஆனால்,  இந்த பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒன்றாக இருக்கின்றன. 



யுகாதி பச்சடி: தேவையான பொருட்கள்


புளி: 1 சின்ன எலுமிச்சை அளவுக்கு
வெல்லம்: ஒரு சிறிய துண்டு
வேப்பம்பூ: 1 டேபிள்ஸ்பூன்
மாங்காய்: சிறியது 1, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
மிளகுத் தூள்: கொஞ்சம் சுவைக்கேற்ப
உப்பு: தேவைக்கேற்ப
 
யுகாதி பச்சடி செய்வது எப்படி?


மாங்காயின் தோலை சீவிவிட்டு அதை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
புளியை அரை கப் தண்ணீரில் 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதை பிழிந்து கரைசல் எடுத்துக் கொள்ளவும். சக்கையை எறிந்துவிடலாம்.
பின்னர் அதில் அரை கப் தண்ணீரும் வெல்லமும் சேர்க்கவும்
இப்போது இதில் துண்டுகளாக நறுக்கிவைத்த மாங்காய் சேர்த்துக் கொள்ளவும்
பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிலான வேப்பம்பூவையும் சேர்த்துக் கொள்ளவும்
கடைசியாக கொஞ்சம் மிளகுத்தூளும் உப்பும் சேர்க்கவும்.
சுமார் ஒரு மணி நேரமாவது ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு பரிமாறவும். இதுதான் யுகாதி பச்சடி.