நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தேவைகள் மற்றும் வெவ்வேறு உணவு முறைகள் உள்ளன. குறைந்த கார்ப் உணவைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எடையைக் குறைக்கலாம், ஆனால் நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது சில முக்கியமான குறிப்புகளை நினைவில் வைப்பது அவசியம். உடல் எடையைக் குறைக்க உணவில் தேவையான மாற்றங்களைச் செய்வதும் நல்லது. சிலர் உடல் எடையை குறைக்க சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள், சிலர் சாதம் சாப்பிடாமல் இருப்பார்கள். சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியுமா அல்லது சாதம் சாப்பிடலாமா என்ற குழப்பம் மக்களிடையே எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சிலர் எடை குறைப்புக்கு சப்பாத்தி பயனுள்ளதாக கருதுகின்றனர், சிலர் சாதம் அவசியம் என்று நினைக்கிறார்கள்.
ஊட்டச்சத்து நிபிநர் பூணம் துனேஜா, சாதம் மற்றும் சப்பாத்தி ஆகிய இரண்டின் ஊட்டச்சத்து அளவும் பெருமளவில் வேறுபடும் என்று கூறுகிறார்.இவ்விரண்டுமே எடை குறைப்பிற்கு உதவும். மேலும், நீங்கள் ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் சப்பாத்தி எடுத்துக் கொண்டால் இரண்டு நாட்கள் சாதம் சாப்பிடுதல் அவசியம் அன்றும் கூறுகிறார் பூணம் துனேஜா. இப்படி சாப்பிடுவதால் தினமும் விதவிதமாக சாப்பிட்டது போலும் ஆகும். ஆரோக்கியமானவர்கள் சாதம், சப்பாத்தி ஆகிய இரண்டினையும் உண்ணலாம். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கு சாப்பிடாமல் பட்டினி கிடப்பது, உடல் எடையை குறைக்காமல் மேற்கொண்டு உடல் நலனை தான் பாதிக்கும்.
எந்த வகை சப்பாத்தி மற்றும் சாதம் நல்லது?
சோளம், கேழ்வரகு மற்றும் திணை சப்பாத்தி ஆகியவை உடல் எஅடயை குறைக்க பெருமளவில் உதவும். இவை கிளைசிமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ள உணவு, அதனால் உடம்பில் இன்சுலின் விகிதம் உடனடியாக அதிகமாம கூடி, சர்க்கரை நோயை விளைவிக்காது. இவை நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தை அதிகள்வில் கொண்ட உணவுகள் ஆகும். வெள்ளை சாதத்தை, தண்ணீரை நன்றாக வடிகட்டிய பின் உட்கொள்ளலாம். இருப்பினும், சாதமோ சப்பத்தியோ, இரண்டுமே குறிப்பிட்ட ஓர் அளவினுல்லேயே உட்கொள்ள வேண்டும்.
நம் ஊட்டச்சத்து நிபுணர், சப்பாத்து, பிரட் ஆகியவை குளூட்டன் அதிகமாக கொண்ட உணவுகள். சாதத்தில் குளூட்டன் அளவு குறைவே. ஆதலால், குளூட்டன் செரிமானக் கோளாறு உள்ளவர்கள் பிரட் மற்றும் சப்பாத்தியை குறைந்த அளவிலேயே உட்கொள்ளுதல் முக்கியம். அதேவேளையில், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சப்பாத்தி உட்கொள்வாதே நல்லது. சர்க்கரை நோயாளிகள் சாதம் சாப்பிடுவதால் அவர்களது இரத்த சர்க்கரை அளவு உடல் பருமன் குறைவதல் பாதிக்கப்படக் கூடும்.
உடல் எடையைக் குறைக்க சில அவசியமான எளிதில் பின்பற்றக்கூடிய டிப்ஸ்:
நார்ச்சத்து கொண்ட உணவை உட்கொள்ளவும். தினமும் சராசரியாக 40 கிராம் நார்ச்சத்து உடலுக்கு அவசியம்.
அன்றாடம் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை உணவில் குறைத்துக் கொள்ளவும்.
ப்ராசஸ்ட், ரீஃபைண்ட் உணவுகளைத் தவிர்க்கவும்.
சூரியகாந்தி விதை போன்ற வித்துக்களின் எண்ணெய்களை பயன்படுத்தவும்
தினமும் உடற்பயிற்சி செய்யவும்
வாழ்க்கைமுறையில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவும்
உணவின் அளவு மற்ற பானங்களின் அளவைக் குறைக்கவும்.
புகை, மதுப்பழக்கம் இருந்தால் அதனை விட்டொழிக்கவும்.