சிலர் வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்களாக இருப்பர். அவர்களுக்கு பாலில் இருந்து பெறப்படும் பனீர் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆனால், டோஃபு சாப்பிடலாம். அதிகளவு புரோட்டீன் நிறைந்த உணவு.


டோஃபு சாலட்:


என்னென்ன தேவை


டோஃபு - ஒரு கப்


தக்காளி - 2


அவகேடோ - 1


பாசிப் பருப்பு


பீட்ரூட் - 1


எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்


வேகவைத்த நிலக்கடலை - அரை கப்


சிறிது எள்ளு சேர்த்து தயாரிக்கப்பட்ட புதினா பேஸ்ட் - ஒரு ஸ்பூன்


வெள்ளரிக்காய் - 2 


மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


செய்முறை:


பாசிப் பருப்பை 5 மணி நேரம் ஊற வைக்கவும். இதை வேகவைத்தும் பயன்படுத்தலாம். இல்லையெனில், அப்படியே பயன்படுத்தலாம். நிலக்கடலையை வேகவைத்து எடுக்கவும். தக்காளி, பீட்ரூட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். டோஃபுவை விருப்பமெனில் சிறிதளவு வெண்ணெயில் வறுத்து எடுக்கலாம்.


ஒரு பவுலில் நறுக்கிய பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, அவகேடோ, வேகவைத்த நிலக்கடலை, பாசிப்பருப்பு எல்லாவற்றை சேர்க்கவும். இதோடு உப்பு, புதினா பேஸ்ட், மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலக்கினால் சுவையான டோஃபு சாலட் தயார்.


டோஃபு பக்கோடா


தேவையான பொருட்கள்:


டோஃபு - 500 கிராம்


கடலை மாவு -1/4 கி.கி.


சீரகம் - ஒரு ஸ்பூன்


கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்


உப்பு -தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை


டோஃபு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், கஸ்தூரி மேத்தி, உப்பு அனைத்தையும் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். அடுப்பில் மிதமான தீயில் கடாயை வைத்து அதில் பக்கோடா பொரித்தெடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நல்லா சூடானதும் டோஃபு துண்டுகளை கடலை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ருசியான டோஃபு பக்கோடா ரெடி.


கடாய் டோஃபூ செய்வது எளிதானதுதான். 



  • கடாயில் சோயா எண்ணெய் ஊற்றவும். பாத்திரம் நன்றாக சூடாகியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  • அத்துடன் மஞ்சள் தூள், தனியா தூள, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் வதங்கியதும் அதில் கஸ்தூரி மேத்தி சேர்க்கவும்.

  • பின்னர், அரைத்த தக்காளி விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். மிதமான தீயில் கொதிக்க விடவும். இதோடு, குடை மிளகாய், டோஃபு, சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

  • கொத்தமல்லி இழை தூவி இறக்கவும். சூடான கடாய் டோஃபு ரெடி.