உற்சாகமாக்கும் ஸ்நாக்ஸ்:


ஒரு இனிய மாலைப் பொழுதில் சூடான ஒரு கப் டீயுடன் சேர்த்து ருசியான ஸ்னாக்ஸ் ஒன்று சாப்பிடுகையில் நமது கவலை, அலுப்பு முற்றிலும் மறந்து போய்விடும். அவசர வாழ்க்கைச் சக்கரத்தின் மத்தியில் இது போன்ற ஒரு பிரேக் நாம் அனைவருக்கும் நிச்சயம் தேவைப்படுகிறது. அது நம்மை அப்படியே லேசாகி விடுவதுடன், நமது மீதி பொழுதையும் உற்சாகத்துடன் கடந்து செல்ல உதவுகிறது.


உடல் எடையின் முக்கிய காரணி:


ஒரு நாளைக்கு ஒரு மனிதன் எத்தனை கலோரிகளை உட்கொள்வது சாலச்சிறந்தது என்ற சில வரைமுறைகள் உள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு ஆணுக்கு 2500 கலோரியும், ஒரு பெண்ணுக்கு 2000 கலோரியும் தேவைப்படுகிறது. இது அவரவர் வேலை பளுவிற்கு ஏற்றவாறு மாறுபடும். இந்த கலோரிகள் நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்படுகின்றன. எனவே இதன் அளவு தான் ஒருவரின் உடல் எடை கூடவும் குறையவும் முக்கிய காரணியாக உள்ளது.





உடல் எடையை குறைக்க விரும்புவோர் அதிக கலோரி, எண்ணெய், மசாலா கலந்த உணவு வகைகளை தவிர்க்க விரும்புவர். அவர்களுக்காகவே பிரத்யேகமாக 100 கலோரிகளுக்கும்  குறைந்த அளவிலான டிக்கி ரெசிபிகளின் வகைகளின் செய்முறைகள். கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த சிற்றுண்டி உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஏற்றதாகும்.

தேவையான பொருட்கள் :

* 100 கிராம் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு
* 2 ஸ்பூன் அளவிலான பொடியாக நறுக்கிய காய்கறிகள் ( வெங்காயம், பீன்ஸ், கேரட், வேகவைத்த பட்டாணி, குடைமிளகாய், சோளம்)
* பச்சை மிளகாய்
* சாட் மசாலா, மிளகு தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள்
* தேவையான அளவு உப்பு
*எண்ணெய்

செய்முறை :

அனைத்து பொருள்களையும் ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும். ஒரு நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெயை சூடாக்கி பிசைந்த பொருட்களை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து, டிக்கிகள் போல தட்டி மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அவ்வளவுதான் டிக்கி டக்குனு ரெடி. இதை சூடாக பரிமாறவும்.


ஆரோக்கியமானது:


இந்த டிக்கிகள் புரதம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளதால் ஆரோக்கியத்தை விரும்புவோர் தாராளமாக இதனை எடுத்துக் கொள்ளலாம். இதனை ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்  உள்ளவர்களும் உண்பது பாதுகாப்பானது. இருப்பினும் அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் சமச்சீரான உணவாக எடுத்து கொள்ளலாம். இதனுடன் சாலட் வகையையும் சேர்த்து கொள்வது சிறந்தது என அறிவுறுத்துகிறார் டயட்டீஷியன் நடாஷா மோகன்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண