தேங்காய் சட்னியை அரைத்து ஒரு மாதம் வரை பதப்படுத்தி பயன்படுத்த முடியுமா? முடியும் என்பதை நிரூபிக்க இருக்கிறது ஒரு ரெசிபி.


அதைப் பகிரும் முன்னர் சில சுவாரஸ்யங்களைப் பேசுவோம். ஒவ்வொரு நாளுமே நாம் விருந்து சாப்பிட முடியாது. அதேபோல் இந்திய உணவில் சட்னி வகைகள் தவிர்க்க முடியாதது. தென்னிந்திய உணவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் காலை, இரவு இருவேளை டிஃபனுக்கு சட்னி இல்லாமல் கடத்தவே முடியாது.
தக்காளி, பூண்டு, தேங்காய், புதினா, மல்லி என விதவிதமான சட்னிகள் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் அன்றாடம் தயார் செய்கிறோம். அதுவும் தேங்காய் சட்னி என்றால் அரைத்து ஒரு மணி நேரம் கடந்தாலே சாப்பிட முடியாதபடி ஆகிவிடுகிறது.
ஆனால் தேங்காய் சட்னியை அரைத்து ஒருமாதம் வரை பதப்படுத்தி பயன்படுத்த முடியும் என்றால் நம்ப முடிகிறதா?


வாங்க ரெசிபிக்குப் போவோம்:
ஒரு நல்ல தேங்காயை உடைத்து இரண்டு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள். தேங்காய் வழுக்கையாக இருந்தால் சட்னி ருசியாக இருக்காது. ஆகையால் நெத்து காயாக எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அரை முடி தேங்காய் துருவிக் கொள்ளுங்கள்.


ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் தோல் நீக்கிய வேர்கடலையை வறுத்தெடுங்கள். மிதமான தீயில் 2, 3 நிமிடங்கள் இந்த கடலை வறுபடட்டும். அதன்பின்னர் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சரியாக ஒரு நிமிடம் மட்டும் வதக்கவும். பின்னர்  புதினா சேர்க்கவும். அதன் பின்னர் இஞ்சி சேர்க்கவும். கூடவே கொஞ்சம் பொரி கடலை சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக கொஞ்சம் புளியும் சேர்த்து வதக்கவும். எல்லாம் வதங்கி பச்சை வாடை போனவுடன் அதை மிக்ஸியில் போடவும். மிக்ஸியில் போடும் போது ஃப்ரெஷ்ஷான மல்லி இலை போட்டு அரைக்கவும். தாளிப்பு வழக்கம்போல் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொட்டவும். பின்னர் அதனை பறிமாறவும்.


ந்த சட்னியில் கொஞ்சம் எடுத்து ஐஸ் க்யூப் ட்ரேயில் போடவும். அதை கெட்டியாக்கி வைத்துக் கொள்ளவும். அதை எடுத்து ஃப்ரிட்ஜ் ஸ்டோரேஜ் கவரில் போட்டு அதை ஃப்ரீஸரில் வைத்துப் பாதுகாக்கவும். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். இது ருசியை மாற்றவே மாற்றாது.


ரெசிபியைப் பார்க்க யூடியூ லிங்க்



சட்னிக்கென்று இன்ஸ்டா பக்கம்:


விதவிதமான சட்னிக்கென்றே ஒரு இன்ஸ்டா பக்கம் ரொம்ப பிரபலமாக இருக்கிறது. அதிலிருந்து உங்களுக்கு ஒரு ரெஸிபி.