மசால் வடை மற்றும் உளுந்து வடைகளை நாம் அனைவருமே சுவைத்திருப்போம். வடை பெரும்பாலானோருக்கு பிடித்த ரெசிபியும் கூட. அதிலும் மாலை நேரத்தில் டீ உடன் மசால் வடை வைத்து சாப்பிடுவதென்றால் ஏராளமானோருக்கு பிடிக்கும். இந்த வடைகளை எல்லாம் விட சுவையான ஒரு வடை உண்டு அது தான் மட்டன் வடை. இறைச்சி, மசாலாக்கள், பருப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வடை உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மலர செய்யும். இந்த மட்டன் வடையின் அலாதி சுவையில் நீங்கள் மெய் மறந்து போவீர்கள். 


தேவையான பொருட்கள்


200 கிராம் மட்டன் கீமா, 2 டீஸ்பூன் கடலை மாவு, 1/2 கப் கடலை பருப்பு, 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி பெருங்காயம், 1/2 டீஸ்பூன் பூண்டு விழுது, கையளவு கொத்தமல்லி இலைகள், 1 தேக்கரண்டி இஞ்சி விழுது, தேவையான அளவு தண்ணீர், 1 சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 1 தேக்கரண்டி கரம் மசாலா, சிவப்பு மிளகாய் சுவைக்கேற்ப, கையளவு கறிவேப்பிலை, உப்பு-  சுவைக்கேற்ப. 


செய்முறை


1.முதலில் ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் பெருஞ்சீரகம், கடலை  பருப்பு, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.


2.இப்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து, பருப்பை சுமார் 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு, அதில் உள்ள தண்ணீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும். ஒரு மிக்சியில் கடலை பருப்பை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


3.துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சியை எடுத்து மிக்சியில் போட்டு கெட்டியான பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கரம் மசாலா சேர்க்கவும்.


4.ஒரு தனி கிண்ணத்தில், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை, இஞ்சி-பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு பெரிய கிண்ணத்தில், வெங்காயம், கொத்தமல்லி, கரம் மசாலா உளுத்தம் பருப்பு, இறைச்சி பேஸ்ட், அரைத்த கடலை பருப்பு பேஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.


5. இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி, அவற்றை வடையாக வட்டமாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.


6.ஒரு கனமான கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், வடையை கடாயில் பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


7.அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி, டிஷ்யூகளை பயன்படுத்தி மட்டன் வடைகளை உலர வைக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான மட்டன் வடை சுவைக்க தயாராகி விட்டது.