தென்னிந்தியாவில் நார்த்தங்காய் மிகவும் அறியப்பட்ட ஒரு உணவு வகை. சாதம், ஊறுகாய் எனப் பல வடிவங்களில் இது அறியப்பட்டாலும்  ஊறுகாய் இதில் பிரதானம். இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகச் செய்யப்படுகிறது. நார்த்தங்காய் எண்ணெயில் நன்கு வதக்கிய பின்னர் சுவையான மசாலா சேர்த்து கலக்கப்படுகிறது.


ஓணம் கொண்டாட்டங்களின்போது இந்த ஊறுகாய் சாத்யாவின் ஒரு பகுதியாகக் சாப்பிடப்படுகிறது. இது கசப்பானது, காரமானது மற்றும் எந்த உணவுடனும் சேர்த்து சாப்பிடப் பொருத்தமானது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் தினமும் சிறிய அளவில் சாப்பிட்டால் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிக எண்ணெய் சேர்க்காத நிலையில் இதனை அனைவரும் சாப்பிடலாம்.


ஊறுகாய்


 






முதலில், ஒரு கடாயில் சிறிது எண்ணெயை எடுத்துக்கொண்டு அதனை சிறிய தீயில் சூடாக்கவும். இந்த நார்த்தங்காயைச் சேர்த்து, எண்ணெயுடன் நன்கு கலக்கவும் (நறுக்கிய நன்கு கழுவப்பட்ட காயை உபயோகிப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்). எப்போதாவது கிளறி, சுமார் 2-3 நிமிடங்கள் அவற்றை வறுக்கவும். முடிந்ததும், தீயை அணைத்து, காயை வேறு ஒரு தட்டில் மாற்றவும்.


அவை முழுவதுமாக குளிர்ந்ததும், அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி, அனைத்து விதைகளையும் அகற்றவும். இப்போது, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கரண்டியால் அல்லது உங்கள் கைகளால் நன்கு கலக்கவும். தாளிக்க, அதே கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு மற்றும் பெருங்காயத்தைப் போட்டு, வெடிக்க விடவும்.
கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து, இஞ்சி-பூண்டின் பச்சை வாசனை போகும் வரை சில நொடிகள் வதக்கவும்.


சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்துமல்லி தூள் சேர்த்து மசாலாவை நன்றாக வதக்கவும். இறுதியாக, வதக்கிய காய் மற்றும் வெள்ளை வினிகர் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தீயை அணைக்கவும். முழுமையாக ஆறியதும், காற்றுப் புகாத பாத்திரத்துக்கு மாற்றி அறை வெப்பநிலையில் 2 நாட்கள் வைக்கவும்.


இந்த சுவையான ஊறுகாயை வீட்டிலேயே செய்து, எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் வைத்துச் சாப்பிடலாம்.