Kitchen Tips : சமையல் பாத்திரங்களில் மஞ்சள், மசாலா கறை போகவே மாட்டேங்குதா? வந்தாச்சு ஈஸி டிப்ஸ்..

பாத்திரங்களில் மஞ்சள் கறையை எப்படிப் போக்கலாம்?

Continues below advertisement

மஞ்சள் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. உடலுக்கு மிக முக்கியமான தேவைகளில் மஞ்சளும் ஒன்று. உணவுக்கு சருமத்துக்கு என பல வகையில் பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட அது ஆல் இன் ஆல் என்றாலும், பாத்திரங்களில் அதன் கறை படிவது அனைவருக்கும் உவப்பானதாக இருப்பதில்லை. அதற்கு என்ன செய்யலாம்? பாத்திரங்களில் மஞ்சள் கறையை எப்படிப் போக்கலாம்?

Continues below advertisement

1. கிளிசரின் 
இரண்டு கப் தண்ணீரை எடுத்து அதில் 1/4 கப் கிளிசரின் மற்றும் 1/4 கப் திரவ சோப்பு சேர்க்கவும். ஒரு துவைக்கும் துணியை எடுத்து, கலவையை கறை மீது தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது மஞ்சள் நிறம் மட்டுமல்லாமல் அனைத்து நிறங்களையும் நீக்கும். 




2. எலுமிச்சை சாறு 

எலுமிச்சையின் அமிலத்தன்மை அதை சக்தி வாய்ந்த சுத்தப்படுத்தியாக மாற்றுகிறது. இரண்டு பங்கு வெதுவெதுப்பான நீரில் ஒரு பகுதி எலுமிச்சை சாறுடன் கலந்து, உங்கள் கறை படிந்த பாத்திரங்களை ஒரே இரவில் கரைசலில் ஊறவைக்கவும். மறுநாள் காலை வழக்கம் போல் சுத்தம் செய்யுங்கள். எலுமிச்சை சாறுக்கு பதிலாக வெள்ளை வினிகரையும் பயன்படுத்தலாம், ஏனெனில் இது அதே அமில பண்புகளைக் கொண்டுள்ளது.

3. சமையல் சோடா 

சமையல் சோடா சமையலறையில் மிகவும் பயனுள்ள பொருட்களில் ஒன்றாகும். இது நமக்குப் பிடித்த இன்னபிற பொருட்களை சமைப்பதற்கு மட்டுமல்லாமல் பல வகையில் கிச்சனில் உதவி செய்கிறது - உதாரணமாக, சுத்தம் செய்தல். பேக்கிங் சோடா மஞ்சள் கறையை அகற்ற மிகச்சிறந்த தீர்வு எனலாம். தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடாவைக் கொண்டு ஒரு திக்கான பேஸ்ட்டை உருவாக்கவும் அதனை கறையின் மீது பரப்பி, 15 நிமிடம் கழித்து சுத்தம் செய்யவும். கறை சுத்தமாக் நீங்கிவிடும்,

4. ஹைட்ரஜன் பெராக்சைடு 

இந்த வெளிர் நீல இரசாயன திரவம் கடினமான கறைகளை அகற்ற உதவுகிறது. நீங்கள் எல்லாவற்றையும் முயற்சித்த பிறகும் உங்கள் பாத்திரங்கள் இன்னும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் என்றால், இந்த இரசாயன திரவத்தைப் பயன்படுத்தவும். கறைகளின் மீது சில துளிகள் தெளித்து, சில நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும். 

5. சூரிய ஒளி 

உங்கள் உணவுகளில் ரசாயனங்களின் பாதிப்பு இருக்குமோ என்கிற கவலையால் நீங்கள் ரசாயனங்களைத் தவிர்க்க நினைத்தால் அதற்கு சுரிய ஒளி சிறந்த மாற்று. கறைகளை நீக்கும் இயற்கையான முறையான சூரிய ஒளியை முயற்சிக்கவும். இது கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் உண்மையில்  சூரிய ஒளி துணிகள் மற்றும் பாத்திரங்களில் இருந்து கறைகளை உறிஞ்சிவிடும். நாள் முழுவதும் உங்கள் உணவுப் பாத்திரங்களை வெயிலில் வைக்கவும். அதில் தானாகவே, மஞ்சள் நிறக்கறைகள் குறைவதை நீங்கள் காண்பீர்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola