நாம் டீ குடித்ததற்குப் பின்பாக பச்சைக்காய்கறிகள், மைதா அல்லது கடலை மாவினால் செய்யப்பட்ட திண்பண்டங்கள், எலுமிச்சை, நட்ஸ் போன்ற உணவுப்பொருள்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் தேவையில்லாத உடல்நலப்பிரச்சனைகள் நமக்கு ஏற்படக்கூடும்.


தேநீர் என்பது பலருக்கு சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய பானமாகவே விளங்கிவருகிறது. என்ன தான் வெயில் சுட்டெரித்தாலும் டீ குடிக்காமல் பலர் இருக்கவே மாட்டார்கள். இதோடு மட்டுமின்றி எப்போது டீ குடித்தாலும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிடுவதையும் மறக்கமாட்டார்கள். ஆனால் டீ குடித்ததற்குப் பின்பாக ஒரு சில உணவுப்பொருள்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது தேவையில்லாத உடல் உபாதைகளை நாம் சந்திக்க நேரிடும். அப்படி என்ன உணவு வகைகள் என்று கேட்கிறீர்களா? வாங்க இப்ப இதுக்குறித்து முழுமையாகத் தெரிந்துக்கொள்வோம்.





பச்சைக்காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்:


நாம் டீ குடித்து முடித்தபின்பாக எப்போதும் பச்சைக்காய்கறிகள் சாப்பிடுவதைத்தவிரக்க வேண்டும். ஏனென்றால் நாம் குடிக்கும் டீ காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக இரும்புச்சத்தை உடல் ஈர்த்துக்கொள்ளும் செயல்திறனைப்பாதிப்பதாக கூறப்படுகிறது.


மைதா, கடலை மாவினால் செய்த பண்டங்களைத் தவிர்த்தல்:


பலருக்கு டீ குடிக்கும் போது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற பழக்கம் இருக்கும். ஆனால் தேநீர் அருந்திய பின்பாக மைதா அல்லது கடலை மாவினால் செய்யப்பட்ட உணவுப்பொருள்களைச் சாப்பிடும் போது செரிமானம் சார்ந்த பிரச்சினைகளை நமக்கு ஏற்படுத்தும். இதோடு வயிறு உப்பிசம், அசிடிட்டி போன்ற பிரச்சினைகளையும் நக்கு ஏற்படுவதாக அமைகிறது.


எலுமிச்சை சாப்பிடக்கூடாது: தற்போது டீ கடைகளுக்கு சென்றாலே லெமன் டீயைத்தான் மக்கள் பலர் விரும்புவார்கள். ஆனால் இது வயிறு நலனுக்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. பொதுவாக டீத்தூளும், எலுமிச்சை சாறும் ஒன்றாக சேரும் போது வயிற்றில் அசிடிட்டி , உப்பிசம் போன்ற  பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.





மஞ்சள் :


அதிகம் மஞ்சள் சேர்க்கப்பட்ட உணவு வகைகளைச் சாப்பிடும் போது, டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.  ஏனென்றால் டீ மற்றும் மஞ்சளில் உள்ள ரசாயன பொருட்கள் ஒன்று சேரும் போது நமது ஜீரண சக்தியை பாதிக்கும் என்பதோடு ஆசிட் ரிஃப்லக்ஸ் பிரச்சினையை கொண்டு வரக் கூடும்


நட்ஸ் வகைகளைத்தவிர்ப்பது நல்லது :


நட்ஸ் வகைகளில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளதால் டீ-யில் உள்ள டெனனின் என்ற வேதிப்பொருள் இந்த சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ளாமல் தடுக்கிறது. எனவே டீ உடன் நட்ஸ் வகைகள் சாப்பிடுவதை எப்போதும் தவிர்க்க வேண்டும்.


பொதுவாக தேநீர் விரும்பிகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மக்களின் ரசனையைப் பூர்த்தி செய்யும் விதமாக பிளாக் டீ, மசாலா டீ, லெமன் டீ போன்ற பல வகைகள் உள்ளது. குறிப்பாக ஒயிட் டீயில் பாக்டீரியா எதிர்ப்புப்பண்புகள் பல இருப்பதாகக் கூறப்படுகிறது.  மேலும் மனிதர்களின் உடலின் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கவும், ரத்த அழுத்தத்தைக்குறைக்கவும் உதவியாக உள்ளதாக அமைகிறது.