தமிழ்நாட்டில் இயங்கும் வாகனங்கலில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள், அலங்கார மற்றும் ஃபிளாஷ் விளக்குகளை கண்டறியவும் அகற்றவும் அனைத்து வகையான வாகனங்களிலும் மாநிலம் முழுவதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 12 மண்டலங்களிலும், 01.11.2023 அன்று சோதனை நடத்தப்பட்டது.

அனைத்து ஆர்டிஓக்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அமலாக்கப்பிரிவு மற்றும் செக்போஸ்ட்களில் பணிபுரியும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு:-

சோதனை செய்யப்பட்ட வாகனங்களின் மொத்த எண்ணிக்கை - 3667

சோதனையின் காலம் - 1.11.2023

பல்வேறு விதிமீறல்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை - 639

விதிக்கப்பட்ட அபராதத் தொகை - ரூ.36,94,200

ஏர் ஹாரன் அகற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை- 1059

திகைப்பூட்டும் விளக்குகள் அகற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை- 180

ஏர் ஹாரன் - ஃபிளாஷ் லைட்டுகள்: 

ஏர் ஹாரன் மற்றும் ஃபிளாஷ் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. 

இத்தகைய ஏர் ஹாரன் மற்றும் ஃபிளாஷ் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் எதிர்புறம் வரும் வாகனங்களில் உள்ள ஓட்டுநர் மற்றும் சாலைகள் வழியாக செல்லும் பயனர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் உள்ளது. இதனால், அதிகளவில் சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து, முகப்பு விளக்குகள் மற்றும் பல வண்ண ஒளி ஃபிளாஷ் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ள பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஏர் ஹாரன் மற்றும் ஃபிளாஷ் லைட்டுகள் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். உபரி பேருந்துகளுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும், வாகன சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி பேருந்துகள், கார்கள் மற்றும் மற்ற வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஃபைனுக்கான சலான்களும் வழங்கப்பட்டது.