டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கான  6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (பிப்.28) கடைசித் தேதி ஆகும். 


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான இடங்களும் இதிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம். 


2022 தேர்வு


இதற்கிடையே 2022ஆம் ஆண்டு பல்வேறு கட்ட தாமதங்களுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியாகின.


ஜூன் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு 


தொடர்ந்து கடந்த மாதம் 2023ஆம் ஆண்டுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


வயது வரம்பு


குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சமூகப் பிரிவுக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 


கல்வித் தகுதி 


TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


இன்றே கடைசி


தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். தேர்வர்கள் இன்று (பிப்.28ஆம் தேதி) இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் tnpscexams.in  என்ற TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை க்ளிக் செய்யவும்.


ஒரு முறை பதிவு உள்நுழைவு விவரங்களை பதிவிட்டு உள்ளே செல்லவும்.


முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள், அதற்கு ஏற்றவாறு முன்பதிவு செய்தபிறகே விண்ணப்பிக்க முடியும். 


அல்லது https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம். 


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.


விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.


குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையை முழுமையாகக் காண: https://www.tnpsc.gov.in/Document/tamil/1_2024-Tam.pdf 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/