முருங்கைக்காய் கிராமங்களில் மிக மலிவாக கிடைக்கக்கூடிய காய். ஆனால் அதன் சத்துக்களோ அபரிதமானவை.  முருங்கைக்காயின் சுவையும் அற்புதமாக இருக்கும். ஆனால் இதை பயன்படுத்தி சுவையான டிஷ்களைச் செய்ய தெரியாததால் சிலர் இதை சாம்பார் போன்ற குழம்பு வகைகளில் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  முருங்கைக்காயை பயன்படுத்தி ஒருமுறை முருங்கை மசாலா செய்து பாருங்க. நிச்சயம் விரும்பி சாப்பிடுவீங்க. வாங்க முருங்கை மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 


முருங்கைக்காய் - 4
சின்ன வெங்காயம் - 7
உப்பு - தேவையான அளவு


தக்காளி - 1 
எண்ணெய் - தேவையான அளவு 
கடுகு - 1/2 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1கொத்து 


செய்முறை


முருங்கைக்காயை வழக்கம் போல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை மிகப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.  ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், தோல் உரித்த சின்ன வெங்காயம், வர மிளகாய்,சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ள வேண்டும். 


ஸ்டவ்வில் ஒரு குக்கர் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர், தக்காளி சேர்த்து, நன்கு குழையும் வரை வதக்கி விட்டு, பின் முருங்கைக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். 


பின் அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட வேண்டும்.  பின் தேவையான அளவு  தண்ணீர் ஊற்றி, 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் இருந்து குக்கரை இறக்கி விட வேண்டும். விசில் அடங்கிய பின்னர், குக்கரைத் திறந்து கொஞ்சம் கிளறி விட்டு, அதன் மேல் மல்லித்தழையை தூவினால் முருங்கைக்காய் மசாலா ரெடி.  ( குறிப்பு: இரண்டு விசில் வரும்போது முருங்கை மசாலா தொக்கு பதத்தில் இருக்க வேண்டும் அதற்கு ஏற்றவாறு தண்ணீர் விட வேண்டும்)


மேலும் படிக்க


DMK Slams Anbumani: ”சென்னையில் வீராவேசம், டெல்லியில் பெட்டி பாம்பாகும் அன்புமணி” - லெஃப்ட் ரைட் வாங்கிய அமைச்சர்


Asian Champions Trophy: முதலிடத்தில் முத்திரை பதித்துள்ள இந்தியா.. 2-வது இடத்தில் மலேசியா.. பாகிஸ்தானுக்கு எந்த இடம்..?