தேவையான பொருட்கள்


ஜவ்வரிசி- 350 கிராம்


சர்க்கரை - அரை கப்


தேங்காய் - 2 


எலக்காய் பொடி- கால் ஸ்பூன்


உப்பு - 3 சிட்டிகை


செய்முறை


350 கிராம் ஜவ்வரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இதில் 3 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து விடவும். இப்போது சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஜவ்வரிசியில் கலந்து கரண்டியால் கிளரி விட வேண்டும். தயிர் சாதம் பதம் வந்தவும் கரண்டியால் ஜவ்வரிசியை சமதளமாக்கி மூடி போட்டு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பின் மூடியை திறந்து பார்த்தால் ஜவ்வரிசி கெட்டிப் பதத்தில் இருக்கும். இப்போது மீண்டும் சுடு தண்ணீர் ஊற்றி கரண்டியால் கிளறி விட வேண்டும். தண்ணீரும் ஜவ்வரியும் சேர்ந்து தயிர் சாதம் பதத்திற்கு இருக்க வேண்டும். மீண்டும் இதை மூடிப்போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பின் திறந்து சிறிது சுடு தண்ணீர் தெளித்து கிளறி விட்டு 10 நிமிடம் மூடி போட்டு ஊற வைக்க வேண்டும். 


ஒரு தேங்காயில் முக்கால் பாகம் அளவு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கால் ஸ்பூன் ஏலக்காய் தூள், அரை கப் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரையை உங்கள் சுவைக்கு ஏற்ப கூடுதலாகவோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு சர்க்கரைப் பிடிக்காது என்றால் நாட்டுச் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம். 


இப்போது ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லி அவிக்க வைக்கும் அளவுக்கு தண்ணீர் வைத்து அடுப்பில் வைத்து விட வேண்டும். தண்ணீர் சூடாகி கொண்டிருக்கும் இதற்கிடையே, கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு ஜவ்வரிசியை உங்கள் கையளவு உருண்டையாக பிடித்து பின் அதை உள்ளங்கையில் வடையாக தட்டிக் கொள்ளவும். இதன் நடுவில் நாம் தயார் செய்து வைத்துள்ள பூரணாத்தை வைத்து உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும்.  இப்போது இட்லி பாத்திரத்தில் ஒரு இட்லி தட்டு வைத்து அதன் மீது வெள்ளை காட்டன் துணியைப் போட்டுக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு உருண்டையாக பிடித்து இட்லி தட்டின் ஒவ்வொரு குழியிலும் வைத்து இட்லி அவிப்பது போல் அவித்து எடுக்க வேண்டும்.  


இப்போது அரை மூடி தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். இரண்டு உருண்டைக்கு கால் ஸ்பூன் அளவு தேங்காய் பால் ஊற்றி ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும். இந்த ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.