தேவையான பொருட்கள்


பால் - அரை கப்


சர்க்கரை - 4 டேபிஸ் ஸ்பூன்


பால் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன் 


தேங்காய் - அரை மூடி 


தேங்காய் தண்ணீர் - சிறிதளவு


செய்முறை


அரை மூடி தேங்காயை துண்டுகளாக்கி எடுத்து அதன் ப்ரெளன் நிற தோலை மட்டும் நீக்க விட்டு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விட்டு, இந்த தேங்காயில் தண்ணீரையும் இதனுடன் சேர்த்து மைய அரைத்து கொள்ள வேண்டும். இதை அப்படியே வைத்து விடவும். இப்போது ஒரு கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் அளவு பால் பவுடர் சேர்க்கவும். 4 டேபிள் ஸ்பூன் அளவு சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து விட்டு அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் அரை கப் அளவு பால் சேர்த்துக் கொள்ளவும். இதை கட்டி இல்லாமல் நன்கு கரண்டி கொண்டு கலந்து விட வேண்டும். நாம் அரைத்து வைத்துள்ள தேங்காயையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இதை கரண்டியால் எடுத்து ஊற்றினால் தேங்காய் பாலின் பதத்தில் ஊற்ற வேண்டும். இந்த கலவை அதிக திக்காக இருந்தால் இதனுடன் மேலும் இரண்டு அல்லது 3 ஸ்பூன் அளவு பால் சேர்த்து இதை ஒரு கரண்டி கொண்டு நன்றாக அடித்து விட வேண்டும். இதை ஐஸ் மோட்ல் இருந்தால் அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அல்லது சில்வர் டம்ளரிலும் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மொட்ல் மீதும் பிளாஸ்டிக் கவரை கொண்டு கவர் செய்து ரப்பர் பேண்டு போட்டுக் கொள்ளவும். இதை ஃப்ரீசரில் 8 லிருந்து 10 மணி நேரம் வைக்க வேண்டும்.


பின் இதை எடுத்து பிளாஸ்டிக் கவரை நீக்கி விட்டு, ஐஸின் நடுவில் ஐஸ் குச்சியை செருகவும். இப்போது ஒரு டளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் இந்த ஐஸ் மோல்டை முக்கால் பாகம் அளவு மூழ்கும் வரை வைக்க வேண்டும். குச்சி மேல் புறம் இருக்குமாரு மோல்டை பிடிக்க வேண்டும். இரண்டு நிமிடத்திற்கு பின் மோல்டை அகற்றினால் அது தனியே ஐஸ் தனியே வந்து விடும். அவ்வளவு தான் சுவையான தேங்காய் ஐஸ் தயார். இதை வெயிலுக்கு இதமாக ஜில்லென்று சுவைக்கலாம்.