தேவையான பொருட்கள்


கத்தரிக்காய் - 4 


உருளைக்கிழங்கு - 2


பூண்டு - 7 பல்


இஞ்சி - ஒரு இன்ச் அளவு


தேங்காய் - 4 ஸ்பூன்


வேர்க்கடலை - 3 ஸ்பூன்


கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி


பச்சை மிளகாய் 2 


சீரகம் - அரை ஸ்பூன் 


சோம்பு - அரை ஸ்பூன்


பெரிய வெங்காயம் -1


தக்காளி -2


மிளகாய் தூள் - 1 ஸ்பூன்


சீரக பொடி - அரை ஸ்பூன்


மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்


கரம் மசாலா - கால் ஸ்பூன்


தனியா தூள் - 1 ஸ்பூன்


எண்ணெய் - தேவையான அளவு


உப்பு தேவையான அளவு


செய்முறை


நான்கு மீடியம் சைஸ் கத்தரிக்காயை கழுவி விட்டு வட்ட வடிவில் சற்று தடிமனாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு உருளைக் கிழங்கை இதே போன்று வட்ட வடிவில் சற்று தடிமனாக வெட்டிக் கொள்ளவும். பின் இவற்றை தனித்தனியே எண்ணெயில் சேர்த்து பொரிக்க வேண்டும். லேசாக நிறம் மாறியதும் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். 


பின் மிக்ஸி ஜாரில் 4 ஸ்பூன் தேன்ங்காய், 7 பல் பூண்டு, 3 ஸ்பூன் வேர்க்கடலை, 1 இன்ச் அளவு இஞ்சி நறுக்கியது, 2 பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 


பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு சேர்க்கவும். பொரிந்ததும், இப்போது நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வதங்கியதும், இரண்டு தக்காளியை அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இதனுடன் ஒரு ஸ்பூன் மிள்காய் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் கொத்தமல்லி தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து 30 நொடிகள் வதக்கி விட்டு, இப்போது தேங்காய் உள்ளிட்டவற்றை சேர்த்து அரைத்துள்ள கலவையை இதில் சேர்க்கவும். இதை ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கலக்கி விட்டு, மூடி போட்டு வேக வைக்கவும்.


மூன்று நிமிடத்தில் கொதி வந்திருக்கும், பச்சை வாசமும் போய்விடும் பின் எண்ணெயில் சேர்த்து வறுத்து வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை இதில் சேர்க்கவும். இதை ஒரு முறை கலந்து விட்டு மூடி போட்டு, 3 நிமிடம் வேக விட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும். இப்போது சூப்பரான கத்தரிக்காய் கிரேவி தயார். இதை சாதம், இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.