Tasty Breakfast Recipe: ஈசி... சிம்பிள்...டேஸ்ட்டி தாஹி உப்புமா -  செஃப் ரன்வீர் ப்ரார் சமயலறையில் இருந்து நமக்காக..


காலை உணவு கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு வித்தியாசமான தாஹி உப்புமா ரெசிபியை நமக்காக பகிர்ந்துள்ளார் செஃப் ரன்வீர் ப்ரார். ரவா உப்புமா பிடிக்காதவர்கள் இந்த தாஹி உப்புமா ரெசிபியை நிச்சயமாக ட்ரை செய்யலாம். இது ஒரு நல்ல மாற்றாக இருக்கும். 


இந்தியர்களின் காலை உணவில் பல வெரைட்டி இருக்கும் சிலர் போஹா, சிலர் பராத்தா, இட்லி, பிரட் என பல சாய்ஸ்கள் இருக்கும். சிலர் உப்புமா உடன் ஒரு கப் சூடான தேநீர் குடிப்பது மிகவும் பிடிக்கும். தென்னிந்திய உணவுகளில் மிகவும் பரம்பரியமானது ரவா உப்புமா. மிகவும் எளிதாகவும், விரைவாகவும் தயாரிக்க கூடிய காலை உணவு. இதை மையமாக வைத்து பலர் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு இதை வேறு விதமாக சமைத்து சாப்பிடுகின்றனர். 


அது போன்ற ஒரு வித்யாசமான ஸ்டைல் உப்புமா தான்  தாஹி உப்புமா. இந்த ரெசிபியை நமக்காக பகிர்ந்துள்ளார் செஃப் ரன்வீர் ப்ரார். தனது சமூக ஊடக பக்கங்களில் பல சமையல் குறிப்புகளையும் மற்றும் வெரைட்டி ரெசிபிக்களையும் பகிர்ந்துள்ளார். 



இந்த தாஹி உப்புமா ரெசிபிக்கு தேவையான பொருட்கள்:


6-7 ரொட்டித் துண்டுகள் ( சிறிய துண்டுகளாக நறுக்கியது)
2 டீஸ்பூன் தயிர் தண்ணீர் 
உப்பு தேவைக்கேற்ப 
3 டீஸ்பூன் எண்ணெய் 
1 டீஸ்பூன் கடுகு 
1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் கடலை பருப்பு 
1.5 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை 
1 ஸ்பூன் கறிவேப்பிலை 
1 இன்ச் நறுக்கிய இஞ்சி 
2-3 டீஸ்பூன் பச்சை/ சிகப்பு மிளகாய்
1 வெங்காயம் பொடியாக நறுக்கியது 
1 / 2 தக்காளி
1 ஸ்பூன் நெய் 
2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்  


செய்முறை:


ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன், தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய பிரட் துண்டுகளை கலந்து தனியாக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். அதனோடு ஊறவைத்த பிரட் துண்டுகளை சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதித்த பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள், நெய் சேர்த்து கலந்து சேவ் வைத்து அலங்கரித்து சட்னியுடன் சூடாக பரிமாறவும். விரைவாக செய்ய கூடிய ருசியான இந்த காலை உணவை நீங்கள் தயார் செய்து பாருங்கள்.