ஒரு மாதிரியான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபியை சாப்பிட்டு சலித்து விட்டதா? எளிமையான மற்றும் புதுமையான முறையில் சுவையான ஒரு ரெசிபியை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


முட்டை - 2 


உருளைக்கிழங்கு -1 


பெரிய வெங்காயம் -1


மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்


தனியாத்தூள் - ஒரு ஸ்பூன்


மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்


சீரகத்தூள் - ஒரு ஸ்பூன் 


கோதுமை மாவு - ஒரு ஸ்பூன் 


கொத்தமல்லித்தழை - சிறிதளவு


செய்முறை


ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை காய் சீவலை கொண்டு துருவிக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது உருளைக்கிழங்கில் உள்ள சாறை பிழிந்து விட்டு அந்த சக்கையை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீர்கத் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் கோதுமை மாவு அல்லது சோள மாவு, பொடியாக நறுக்கிய சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து, இதனுடன் ஒன்று அல்லது இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி இவை அனைத்தையும் கைகளால் நன்கு கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு கூடுதல் காரம் வேண்டும் என்றால் இந்த கலவையுடன் ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். 


இப்போது அடுப்பில் நான் ஸ்டிக் பான் அல்லது ஒரு கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் நாம் தயாரித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போன்று பரப்பி விட வேண்டும். இதை மூடிப்போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேக வைக்கவும். பின் மறுபுறம் திருப்பி விட்டு மேலும் இரண்டு நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதை நீங்கள் பிரேக் ஃபாஸ்ட் ரெசிபியாகவும் செய்யலாம். அல்லது ஸ்நாக் ரெசிபியாகவும் சாப்பிடலாம். இது போல் ஒரு ஆம்லெட் செய்து சாப்பிட்டாலே உங்களுக்கு நிறைவான உணவு உட்கொண்ட திருப்தி கிடைக்கும். குறிப்பாக குழந்தைகள் இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர்.