தேவையான பொருட்கள்


முட்டை - 2 


கோதுமை மாவு 1 கப்


உப்பு - தேவையான அளவு


கரம் மசாலா - கால் டீஸ்பூன் 


சீரகத்தூள் - கால் டீஸ்பூன்


மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்


பெரிய வெங்காயம் - 1


கறிவேப்பிலை - சிறிதளவு 


மிளகுத்தூள் - சிறிதளவு 


எண்ணெய் - தேவையான அளவு 


மஞ்சள் தூள் - டீஸ்பூன்


பச்சை மிளகாய் -1


செய்முறை


ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துக் கொள்ள வேண்டும்.  இதை அப்படியே மூடி போட்டு வைத்து விட வேண்டும். 


மற்றொரு கிண்ணத்தில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும், கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் அளவு மிளகாய் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் அளவு பீட் செய்து கொள்ள வேண்டும். 


ஒரு கப் கோதுமை மாவுக்கு 2 முட்டை போதுமானதாக இருக்கும். நீங்கள் அதிகமாக ஸ்டஃப்டு சப்பாத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்கேற்றவாறு கோதுமை மாவு மற்றும் முட்டைகளை எடுத்துக் கொள்ளலாம். 


ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி இந்த முட்டையுடன் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.  இதனுடன் கால் டீஸ்பூன் கரம் மசாலா தூள், கால் டீஸ்பூன் சீரக தூள், சிறிது மிளகுத்தூள் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். 


இப்போது சற்று பெரிய சைஸ் சப்பாத்தி திரட்டும் அளவு உருண்டையை எடுத்து மெல்லிய சப்பாத்தியாக பெரிதாக தேய்த்துக் கொள்ள வேண்டும். சப்பாத்தியின் நடுவில் 3 ஸ்பூன் முட்டை கலவையை சேர்த்து உள்ளங்கை அளவுக்கு பரப்பி விட்டுக் கொள்ள வேண்டும். இதை நான்கு புறமும் முட்டை கலவை வெளியே வராதவாறு மடித்துக் கொள்ள வேண்டும். 


இப்போது இதை தோசைக்கல்லில் சேர்த்து சப்பாத்திக்கு எண்ணெய் சேர்ப்பது போல் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். அப்போது தான் உள்ளே இருக்கும் முட்டை கலவை வேகும். 


இதை 4 துண்டுகளாக வெட்டி எடுத்து கெட்சப் உடன் வைத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை நீங்கள் பிரேக் ஃபாஸ்ட் மற்றும் டின்னருக்கு தயார் செய்யலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.