சுவையான ஆலு பியாஸ் பக்கோரா ரெசிபி மிகவும் சுவையானது. இதனுடன் புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி அல்லது கெட்சப் வைத்து சாப்பிடலாம். பூண்டு, மசாலா உள்ளிட்டவை செய்து செய்யப்பட்ட இந்த பகோரா மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்



  • 2 பெரிய உருளைக்கிழங்கு

  • 2 பெரிய வெங்காயம், நறுக்கியது

  • 5-6 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கவும்

  • 1/2 கப் கொத்தமல்லி இலைகள், பொடியாக நறுக்கியது

  • 4 பூண்டு பற்கள் நசுக்கப்பட்டது

  • 2 கப் கடலை மாவு

  • 1/2 கப் அரிசி மாவு

  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்

  • 1/2 தேக்கரண்டி அஜ்வைன்

  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்

  • 1/2 தேக்கரண்டி சர்க்கரை

  • சுவைக்கேற்ப உப்பு

  • ஆழமாக வறுக்க எண்ணெய்


செய்முறை


1. உருளைக்கிழங்கை கழுவி தோலுரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

2.துருவிய உருளைக்கிழங்கை 2 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். தண்ணீரில் ½ தேக்கரண்டி மஞ்சள்தூள் மற்றும் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

 

3.ஒரு பெரிய கலவை கிண்ணத்தில், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். அவற்றை உங்கள் கைகளால் மெதுவாக நசுக்கவும்.

 

4.துருவிய உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீரை பிழியவும். பிழியும் போது துருவிய உருளைக்கிழங்கு நசுங்கி குழையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதை வெங்காய கலவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

5.கிண்ணத்தில் மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு,  பூண்டு, சர்க்கரை, கொத்தமல்லி இலைகள் மற்றும் அரிசி மாவு சேர்க்க வேண்டும்.

 

6.கடைசியாக, கடலை மாவை சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். அப்போது தொடர்ந்து கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

 

7.இந்த கலவையில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விட்டு 5 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.

 

8.இந்த கலவையில் சிறிது சிறிதாக போண்டா அளவிற்கு மாவு எடுத்து சூடான எண்னெயில் சேர்த்து  பொன்னிறமாகவும் மிருதுவாகவும் வறுக்க வேண்டும். கொத்தமல்லி, புதினா சட்னி அல்லது கெட்சப் உடன் பகோராவை சூடாக பறிமாறலாம். 

 

மேலும் படிக்க