சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு ஒரே மாதிரியான சைடிஷ்களை வைத்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்போது இந்த சைடிஷ் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. சோயா கீமா மசாலா ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். மேலும் சோயா புரோட்டீன் நிறைந்த ஒரு உணவு பொருள் ஆகும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


1 கப் சோயா







வெங்காயம் 1








தக்காளி 1








பச்சை மிளகாய் 1








1 இன்ச் இஞ்சி








பூண்டு 3








வளைகுடா இலவங்கப்பட்டை,








கிராம்பு








பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி








1 டீஸ்பூன் மிளகாய் தூள்








1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்








1 தேக்கரண்டி கரம் மசாலா








1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்







உப்பு 1 தேக்கரண்டி


செய்முறை


சூடான தண்ணீரில், 1 கப் சோயா துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதை பிழிந்து, கீமாவாக மாறும் வரை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்து அதனை தனியாக வைத்து கொள்ள வேண்டும். 


பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 1 வெங்காயம், 1 தக்காளி, 1 பச்சை மிளகாய், 1 துண்டு  இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும். விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

 




ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்த மசாலா, வளைகுடா இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் விதைகள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும்.








பின்னர் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு 1 தேக்கரண்டி சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.


இப்போது சோயா கீமா மற்றும் தண்ணீர் 1/2 கப் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைத்து, கொத்தமல்லி இலை மற்றும் கசூரி மேத்தி இலைகள் சேர்த்து இறக்கி விடலாம். அவ்வளவு தான் சுவையான சோயா கீமா மசாலா தயார். இதை சூடான சப்பாத்தி அல்லது சாதத்துடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.