IND Vs AUS LIVE Score: பதம் பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா; 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
India Vs Australia 2nd T20 Live Updates: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் லைவ் ஸ்கோர் குறித்து ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.
ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணியின் தோல்வி வித்தியாசத்தினை குறைக்க போராடிய ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
13.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
12 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த வந்த நிலையில் மிகவும் நிதானமாக ஆடி வந்த ஸ்மித் தனது விக்கெட்டினை 19 ரன்னில் இழந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியா அணியின் அபாயகரமான பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் தனது விக்கெட்டினை 12 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிஒ 4.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை 9 பந்தில் 19 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார்.
இஷான் கிஷன் 32 பந்துகளில் தனது விக்கெட்டினை 52 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
இஷான் கிஷன் 30 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 164 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்தியா அணி 14.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 150 ரன்களைக் கடந்து விளையாடி வருகின்றது.
இஷான் கிஷன் ருத்ராஜ் கூட்டணி 48 பந்துகளில் 67 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது.
13.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 125 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 94 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 8.1 ஓவரில் ஒரு விக்கெட்டினை இழந்து 90 ரன்களை எட்டியது.
8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 89 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆடம் ஜாம்பா வீசிய 8வது ஓவரில் இந்த போட்டியில் தனது முதல் பவுண்டரியை விளாசினார் இஷான் கிஷன்.
ஆஸ்திரேலியா அணி 7வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது.
6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 79 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 6வது ஓவரின் கடைசிப் பந்தில் இஷான் கிஷன் களமிறங்கியுள்ளார்.
போட்டியின் 6வது ஓவரின் 5வது பந்தில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 25 பந்தில் 53 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்தார்.
இந்திய அணியின் ஜெய்ஸ்வால் அதிரடியாக 24 பந்தில் 53 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றார்.
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் குவித்துள்ளது.
போட்டியின் 4வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரியும் 4வது பந்தில் சிக்ஸரும் விளாசியுள்ளார்.
போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய மேக்ஸ்வெல்லினை இந்திய தொடக்க வீரர்கள் டார்கெட் செய்தனர். இந்த ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினர். மூன்று ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்தது.
போட்டியின் மூன்றாவது ஓவரில் ஜெய்ஸ்வால் இரண்டு பவுண்டரிகளை விளாசி அமர்க்களப்படுத்தி வருகின்றார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணியின் முதல் பவுண்டரியை முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ருத்ராஜ் கெய்க்வாட் விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்திய அணியின் இன்னிங்ஸினை ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் தொடங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா ப்ளேயிங் லெவன்: ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்(கேட்ச்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று (நவம்பர் 26) இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி, டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
IND Vs AUS 2nd T20: திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:
கடந்த வாரத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா தரப்பிலும் அதிகப்படியாக இளம் வீரர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் 209 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை அதிரடியாக எட்டிய இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி-20 போட்டி தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா
அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியில் வென்று தொடரில் மேலும் முன்னிலை பெற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு இருக்கும் ப்ளஸ்
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது இந்திய அணி வீரர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய வீரர்கள் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இல்லை என்றால் டி 20 தொடரையும் தாரை வார்க்க வேண்டி வரும். உலகக் கோப்பையில் விளையாடிய அணியை பெரிய மாற்றம் எதுவும் இன்றி ஆஸ்திரேலிய அணி அப்படியே களமிறக்கியுள்ளது. முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட மேக்ஸ்வெல், ஜாம்பா டிராவிஸ் ஹெட் ஆகியோர் இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகள் விபரம்
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்(கேட்ச்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா
ஆஸ்திரேலியா ப்ளேயிங் லெவன்: ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -