Taste Atlas Chicken Dishes : உலகின் மிகச்சிறந்த சிக்கன் உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பட்டர் சிக்கன் 4-வது இடத்திலும், சிக்கன் டிக்கா 6-வது இடத்திலும், சிக்கன் 65 - 10-வது இடத்திலும், தந்தூரி சிக்கன் 18-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளது. Korean Fried chicken என்னும் கொரியன் வறுத்த சிக்கன் என்னும் உணவு முதலிடம் பிடித்துள்ளது.
Taste Atlas, மொத்தமாக சிக்கன் உணவுகள் 50-ஐப் பட்டியலிட்டுள்ளது. அதில் இந்திய சிக்கன் உணவுகள் 10 இடங்களுக்குள், 3 இடங்களைப் பிடித்துள்ளது.
பார்ட்டியோ, கல்யாணமோ, காதுக்குத்தோ, பிறந்தநாள் விழாக்களோ சிக்கன் தான் முதலில் நம் மனதுக்கு வந்து நிற்கும் உணவு.
(Butter Chicken) பட்டர் சிக்கன் 4-ஆம் இடத்தையும், (Tikka) சிக்கன் டிக்கா 6-ஆம் இடத்தையும், சிக்கன் 65 (Chicken 65) 10-ஆம் இடத்தையும், தந்தூரி சிக்கன் (Tandoori Chicken) 18-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை Chikin (or Korean Fried Chicken) சிக்கின் என்னும் கொரிய சிக்கன் உணவு பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை Pollo Al Acuyo (மெக்சிகோ) மற்றும் மூன்றாம் இடத்தை Musakhan (பாலஸ்தீன்) சிக்கன் உணவும் பிடித்துள்ளது.