பொதுவாக உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பரவலாக காணப்படும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதிலும் மேல் தொப்பை அதிகரிப்பு என்பது இன்னும்  உடலுக்கு அதிக சிரமங்களை தருகிறது. வயிற்றுப் பகுதியில் ஏற்படும் மேல் தொப்பையானது கொழுப்பு படிந்து பெரும்  நோய்களை ஏற்படுத்தும் காரணியாக அமைகிறது.


மேல் வயிறு பெருத்தல்  என்பது, உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள பகுதிகளில்  கொழுப்பு திரட்சி ஏற்படுகிறது என்பதை குறிக்கிறது. இதன் விளைவாக இடுப்பு அளவு அதிகரித்து குனிந்து நிமிர்ந்து வேலைகளை செய்ய முடியாமல் போகிறது.மேல் தொப்பை மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் , அளவை விட அதிக கொழுப்பு படிந்தால் கலோரிகளை குறைப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள்  எடையைக் கட்டுப்படுத்தவும் தொப்பையைக் குறைக்கவும் உதவும் .


அதே வேளை  அதிகமாக உள்ள மேல் வயிற்று கொழுப்பை அகற்றுவது மிகவும் சிக்கலானது என கூறப்படுகிறது.   மேல்  வயிற்று கொழுப்பு என்பது தவறான வாழ்க்கை முறை பழக்கங்களால் ஏற்படுகிறது என நம்பப்படுகிறது. சிலருக்கு,  மரபியல் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மேல் தொப்பை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. 


முதலில் மேல் தொப்பை கொழுப்புக்கான அடிப்படை  காரணங்களை பார்க்கலாம்.


      
1. ஆரோக்கியமற்ற உணவை முறை:


முறையற்ற உணவு பழக்க வழக்கம் காரணமாக உடல் எடை அதிகரிப்பு மற்றும் மேல் வயிற்று எடை அதிகரிப்பு என்பன ஏற்படுவதாக கூறப்படுகிறது. துரித உணவுகளை நேரங்காலம் இல்லாமல் உட்கொள்வது, இரவில் அதிகளவில் துரித உணவுகளை எடுத்துக் கொள்வது போன்ற காரணங்களால் மேல் வயிறு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. சூடான சமோசா, சீஸி ப்ரைஸ், வெண்ணெய் பாப்கார்ன் , சிக்கன் பர்கர் முதல் சர்க்கரை கலந்த ஜிலேபிஸ், சீஸ் கேக்குகள் மற்றும் சாக்லேட் நிறைந்த டோனட்ஸ் என இந்த துரித உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இது குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் அதிக அளவில் பாதிப்படைய வைக்கிறது. இந்த உணவுகளில் பெரும்பாலானவை 'ஆரோக்கியமற்றவை' என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த துரித உணவு வகைகள் உடலுக்கு எந்த நன்மையையும் செய்யப் போவதில்லை. இதில் ஊட்டச்சத்து என்பது பூஜ்ஜியமே என கூறப்படுகிறது. இந்த துரித உணவுகளில்  கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்றவை அதிக அளவில் இருப்பதால் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.


 2. முறையான உடற்பயிற்சி இல்லாமை:


 உடற்பயிற்சிகள் மட்டுமே உடல் எடை மற்றும்  மேல் வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் என்று நினைத்தால் அது தவறானது. ஆரோக்கியமான இதயம் மற்றும் தட்டையான வயிற்றைப் பெற காலையில் ஜாக்கிங் எனப்படும் மெது ஓட்டம் , தினசரி   யோகா பயிற்சிகள் செய்வது மிக முக்கியமான சொல்லப்படுகிறது. உடற்பயிற்சியி மற்றும் யோகாசனம் செய்யும் போது மேல் வயிற்று தொப்பையை குறைப்பதற்கு தனிப்பட்ட முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 


3. மன அழுத்தம்:


மன அழுத்தம் காரணமாக உடல் எடை அதிகரிப்பு என்பதை கேள்விப்பட்டிருப்போம். அதேபோலதான் மேல் வயிற்று தொப்பையும் ,இந்த மன அழுத்தம் காரணமாகவே அதிக அளவில் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. கடுமையான மன உளைச்சல், வாழ்க்கையில் ஏற்படும் சில முறையற்ற சம்பவங்கள், தடைகள் உடலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக தான் உடல் எடை அதிகரிப்பு தொப்பை போன்றன ஏற்படுகிறது. மன அழுத்தம் காரணமாக உடலில் அதிகப்படியான கார்டிசோலை சுரக்கச் செய்கிறது, இது கல்லீரலை பாதிப்படையச் செய்து அதிகப்படியான சர்க்கரையை வெளியிடத் தூண்டுகிறது.


சில சமயங்களில் தேவையானதை விட அதிக அளவிலான  கொழுப்பை உள்ளுறுப்புகளில் உண்டாக்குகிறது.


4. ஒழுங்கான தூக்கமின்மை:


இரவு நேரங்களில்  முறையற்ற தூக்கம் காரணமாக உடல் எடை அதிகரிப்பு, மேல் வயிறு எடை அதிகரிப்பு போன்றன ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. 
இரவில் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு  இடுப்பு அளவு அதிகரிப்பதோடு. மேல் வயிறு தொப்பையும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே இரவில் குறைந்தது எட்டு மணிநேரம் தூங்குவதை கட்டாயமாக்குங்கள். இதுவே உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு நிவாரணியாக அமையும்.


இரவில் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குபவர்களை விட, ஆறு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. போதுமான தூக்கம், நாள் முழுவதும்  சுறுசுறுப்பாக புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.


5. வயதும் ஒரு காரணம்:


நாம் வயதாகும்போது, ​​நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. வயது செல்லச் செல்ல  சதைப்பகுதியில் கொழுப்பு குறைந்து, உள் உறுப்புகளில் கொழுப்பு படிய ஆரம்பிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் வயதானவர்களுக்கு அதிக அளவில் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன. உள் உறுப்புகளில் படியும் கொழுப்பு பெருத்த வயிறை ஏற்படுத்துகிறது. இவ்வாறான காரணங்களால் மேல் வயிற்று தொப்பை ஏற்படுவதை தடுக்க முடியாமல் போகிறது.
 
வயிற்றின் மேல் தொப்பையை குறைக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்:


1. தண்ணீர் குடிக்கவும்:


தொடர்ந்து போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் பல நோய்கள் ஏற்படுவதை  தடுக்கலாம். சோடா அல்லது எனர்ஜி பானங்களுக்குப் பதிலாக, வெற்றுத் தண்ணீரைக் குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.  இது நம் உடலை சுத்தப்படுத்தி, அனைத்து நச்சுகளையும் வெளியேற்றி உடலை புதுப்பிக்கிறது. தொடர்ந்து தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.  நீரானது உடலில் அதிகமாக படிந்துள்ள கொழுப்பை மாயாஜாலமாக கரைக்கிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதிகாலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதன் மூலம் சுறுசுறுப்பு இயங்க வைக்கிறது. இவ்வாறு சுறுசுறுப்புடன் இயங்க வைப்பதால் உடலில் படிந்துள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து செல்ல வழி வகுக்கிறது. இந்த தண்ணீர் அருந்துவது என்பது எந்த பக்க விளைவுகளும் இல்லாத சிகிச்சை முறையாகும். தொடர்ந்து போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் பல  நோய்கள் வராமல் தடுக்கலாம். 


2. ஊட்டச்சத்து மிக்க உணவுகள்:


உடலில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் வகையிலான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை நாள்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மனநிலையை சீராக வைத்திருக்க ஓட்ஸ் மற்றும் விட்டமின் சி நிறைந்த வாழைப்பழம் மன அழுத்தத்தை எதிர்க்கும் சிறந்த உணவு வகையாகும் . நாள்தோறும் இவ்வாறு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது மேல் வயிறு தொப்பை என்பது குறைந்துவிடும். நாள் தோறும் புதிய பழ வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் தேங்காயும் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் சீராக வைத்துக் கொள்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தேங்காய் உணவானது அதிகளவிலான நேர்மறை ஆற்றலை உடலுக்கு தருவதால் உடலில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடை செய்கிறது. அதேபோல் உணவில் பருப்பு வகைகளையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் உடல் சோர்வு குறையும் எனவும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது . ஆகவே இவ்வாறான காரணங்களால் உடை உடல் எடை கட்டுக்குள் இருக்கும் எனவும்  மேல் வயிறு  தொப்பை என்பன ஏற்படாது எனவும் சொல்லப்படுகிறது.


3. பசிக்கும் போது மட்டும் உணவு எடுப்பது:


ஆரோக்கியமான உணவு முறை என்பது உடல் எடையை கட்டுக்குள்  வைத்திருக்கும் என சொல்லப்படுகிறது . பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்வது மேல் வயிறு உண்டாவதை தடுக்கிறது. அடிக்கடி சாப்பிடுங்கள், ஆனால் பசித்துச் சாப்பிட வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல் நார்ச்சத்து மிக்க மென்மையான உணவுகளை உண்ணும் போது அவை விரைவில் செரிமானம் அடைகிறது. செரிமானம் சீராக இருந்தால் உடல் எடை என்பது அதிகரிக்காமல் கட்டுக்கோப்பாக இருக்கும். மேல் வயிறும் அதிக எடையுடன் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


 அதிகளவிலான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கச்  செய்கிறது. அதிகளவான சர்க்கரை உடலில் சேமிக்கப்படுவதால் மிகப் பெரிய வயிறு பானை போல் உண்டாகும். ஆகவே உடலுக்கு செரிமானம் அடையக்கூடிய வகையில் ,நார்ச் நார்ச்சத்து மிக்க காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது சிறப்பு என அறிவுறுத்தப்படுகிறது.


4.  எட்டு மணிநேர தூக்கம் அவசியம்:


தூக்கமின்மை என்பது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது. கட்டாயமாக எட்டு மணி நேரம் தூங்குவது என்பது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தடை செய்கிறது. அதேபோல் உடலில் முக்கிய செயலாற்றும் ஹார்மோன்களான கிரெலின் மற்றும் லெப்டின் போன்றன மாறுபாடுகளை சந்திக்கும் என கூறப்படுகிறது. கிரெலின் என்பது எப்போது உண்ண வேண்டும் என நமக்குத் தெரிவிக்கும் ஹார்மோன் ஆகும். மேலும்  தூக்கம் இல்லாமல் இருக்கும்போது, ​​நம் உடல் அதிக கிரெலின் உற்பத்தியை செய்கிறது. இவ்வாறு அதிக அளவில் உற்பத்தியாகும் குறித்த ஹார்மோன் ஆனது பசியை தூண்டி உடலை பெருக்கச் செய்கிறது.


 அதேசமயம், லெப்டின் என்ற ஹார்மோன் தான் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்கிறது. ஒருவருக்கு தூக்கம் இல்லாமல் இருக்கும்போது, ​​அவரது உடலில் லெப்டின் உற்பத்தி குறைவாக இருக்கும். ஆகவே எட்டு மணி நேர கட்டாயத் தூக்கம் என்பது, உடல் எடையை குறைத்து ,தொப்பை ஏற்படாமல் உடல் கட்டமைப்பை சீராக பார்த்துக் கொள்கிறது.


 5. தொடர் உடற்பயிற்சி செய்யவும்:


உடலில் அதிகப்படியாக சேர்ந்துள்ள கலோரிகளை எரிக்கவும், தசைகளை உருவாக்கவும், தொப்பையை போக்கவும் உடற்பயிற்சியே சிறந்த வழி என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.  குறைந்தது வாரத்தில் நான்கு நாட்களாவது குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி கூடம், நீச்சல், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்‌ . ஒவ்வொரு நாளும் தொடர்ந்து 45 நிமிடங்கள் ஓட்டம் அல்லது நடை பயிற்சி செய்வது தொப்பையை விரைவில் குறைக்க உதவும். ஆகவே தொப்பையின் மேல் உள்ள கொழுப்பைக் குறைக்க விரும்பினால், உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதிக தண்ணீரை குடிக்க தொடங்குங்கள்.  மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு இரவு நேரங்களில் எட்டு மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும்.