சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் சைனீஸ் உணவுகள் விற்கும் கடைகளில் அண்மைக்காலமாக நூடுல்ஸ் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றுடன் தென்படும் மெனுக்களில் ஒன்று லோட்டஸ் ஸ்டெம். தாமரைப்பூவின் உள்ளிருக்கும் பருப்பினை எடுத்து நம் முன்னோர்கள் வெறுமனே மென்று சாப்பிடும் பழக்கமும் இருந்திருக்கிறது. தாமரை பூ மொத்தமாகவே மருத்துவ நலன் கொண்டது என்றாலும், குறிப்பாக தாமரையின் தண்டுப்பகுதி பல்வேறு நலன்களை உள்ளடக்கியது.




தாமரை வேர்கள், வடமொழியில் ’கமல் காக்ரி என்று குறிப்பிடப்படுகின்றன, அவை நான்கு அடி நீளம் வரை வளரக்கூடிய ஒரு மரவகையிலான வேர்ப்பகுதியாகும். இந்த வேர் உண்ணக்கூடிய தன்மை உடையது. தாமரை வேர் என்பது ஒரு வகை நீர்வாழ் வேரில் வளரும் காய்கறி ஆகும், இது வடிவத்தில் நீண்ட பூசணிக்காயைப் போல் இருக்கும். குறிப்பாக தாமரை வேர் ஒரு உண்ணக்கூடிய காய்கறியாகும். இது மிருதுவான அமைப்பும் மேலும் லேசான இனிப்பு சுவையும் கொண்டது. தாமரை வேரில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் கொலஸ்ட்ராலும் இல்லை. தாமரை வேரில் காணப்படும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் சிறப்பு கலவையானது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, மேங்கனீசு மற்றும் மக்னீஸியம் ஆகியன தாமரை வேரில் காணப்படும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகும். தியாமின், பாந்தோத்தேனிக் அமிலம், துத்தநாகம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் கூடுதலாக, தாமரை வேரில் உள்ளன. மேலும் புரதச்சத்தின்  குறிப்பிடத்தக்க ஆதாரமாக தாமரை உள்ளது. இது நார்ச்சத்தையும் உள்ளடக்கியது.


தாமரை வேரின் பயன்கள்..


-தாமரை வேர் உடல் எடையை குறைக்க உதவுகிறது
-தாமரை வேர்கள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது
-தாமரை வேர் செரிமானத்தை எளிதாக்குகிறது
-தாமரை வேர் இதயத்துக்கு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது.
-தாமரை வேர்கள் சருமத்திற்கு நல்லது
-தாமரை வேர் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது
-தாமரை வேர் மன அழுத்தத்தை குறைக்கிறது


வேரை நன்கு சுத்தம் செய்த பிறகு சமையலுக்கு துண்டுகளாக வெட்டலாம். இதனை எப்படித் தயாரிப்பது எனத் தெரியாதவர்கள் வெறுமனே வேகவைத்தல், வதக்குதல், தேன் மற்றும் மிளகாயுடன் டீப் ஃப்ரை செய்தல் போன்ற வகைகளில் சமைத்து உண்ணலாம். தாமரை வேரில் உள்ளார்ந்த உடல்நல அபாயங்கள் எதுவும் இல்லை என்றாலும், சிலர் அதை பச்சையாக சாப்பிடுகிறார்கள். இது பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகள் உடலில் சேர்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே தாமரை வேர்களை உண்ணும் முன் எப்போதும் நன்கு வேகவைத்துச் சமைக்க அறிவுறுத்தப்படுகிறது.