Sprouts & Palak dosa: ஊட்டச்சத்து நிறைந்த பச்சை பயறு, பாலக்கீரை தோசை - இதோ ரெசிபி!

Sprouts & Palak dosa: தோசை பிரியர்களுக்கு பிடித்த ஊட்டச்சத்து நிறைந்த ரெசிபியை காணலாம்.

Continues below advertisement

தோசை பிரியர்களே! தோசை எப்படி ஊட்டச்சத்து மிகுந்ததாக மாற்ற முடியும் என்ற யோசனையில் இருக்கிறீர்களா? முளைக்கட்டிய தானியங்கள், பாலக்கீரை சேர்த்து தோசை செய்வது தேவையான அளாவு புரதச்சத்து கிடைப்பதை உறுதி செய்யவும். 

Continues below advertisement

பாலக்கீரை, முளைக்கட்டிய தானியங்கள் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று காணலாம். 

முளைக்கட்டிய பச்சை பயறு தோசை:

என்னென்ன தேவை?

இட்லி பச்சரிசி - ஒரு கப்

கொண்டைக்கடலை - அரை கப்

பச்சை பயறு - ஒரு கப்

சிகப்பு மிளகாய் - 2 (தேவையான அளவு)

வெந்தயம் - அரை கப்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

கொத்தமல்லி - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லி மாவுக்கு தேவையானதை ஊற வைத்து அரைத்து எடுக்கவும். வீட்டில் தோசை மாவு இருந்தாலும் ஓகே அல்லது கடையில் வாங்கி செய்வதும் உங்கள் விருப்பம்தான்.

கொண்டைக்கடலை, பச்சை பயறு ஆகியவற்றை நன்றாக 6-7 மணி நேரம் முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து முளைக்கட்டி வைக்க வேண்டும். 

கொத்தமல்லி, கருவேப்பிலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸி ஜாரில் முளைக்கட்டிய பச்சை பயறு, பாலக்கீரை, சிகப்பு மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி,  சில பூண்டு பல் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக தோசை மாவு போன்று அரைக்கவும். இதை தோசை மாவுடன் சேர்க்கவும். 

அடுப்பில் தோசை கல்லை மிதமான தீயில் வைக்கவும். அதில், நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தோசை ஊற்றவும். இரண்டு புறமும் பொன்னிறமாகியதும் தோசை ரெடி. இதை  தேங்காய் சட்னி, கார சட்னி  உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். 

உடுப்பி தக்காளி தோசை 

என்னென்ன தேவை?

இட்லி பச்சரிசி - ஒரு கப்

தக்காளி - 3 

கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

சிகப்பு மிளகாய் - 2 (தேவையான அளவு)

சீரகம் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

கொத்தமல்லி - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசி ஒரு கப், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊர வைக்கவும். கொத்தமல்லி, கருவேப்பிலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸி ஜாரில் அரிசி, கடலை பருப்பு, சிகப்பு மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக தோசை மாவு போன்று அரைக்கவும். தக்காளி, உப்பு இரண்டையும் நைஸாக அரைத்து அரிசி மாவுடன் சேர்க்கவும். நன்றாக கலந்து கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்க்கவும். அவ்வளவுதான். மாவு தயார். 

அடுப்பில் தோசை கல்லை மிதமான தீயில் வைக்கவும். அதில், நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தோசை ஊற்றவும். இரண்டு புறமும் பொன்னிறமாகியதும் தோசை ரெடி. இதை  தேங்காய் சட்னி, கார சட்னி  உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். 


 

Continues below advertisement