Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: பனீர் கிரேவி செய்வது எப்படி என காணலாம்.

Continues below advertisement

பனீர் மசாலா கிரேவி

Continues below advertisement

என்னென்ன தேவை?

பனீர்- 250 கிராம்

வெங்காயம் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி விழுது - ஒரு கப்

தேங்காய் பால் - ஒரு கப்

புளி தண்ணீர் - ஒரு டேபிள் ஸ்பூன்

நெய் - சிறிதளவு

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

கார்ன்ஃப்ளார் மாவு -1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் டோஸ்ட் செய்து எடுக்கவும். தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கடாய் சூடானதும் அதில் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு உள்ளிட்ட மசாலா சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதோடு தக்காளி விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, சிறிதளவு புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். மிளகாய் பொடி வாசனை போனதும் அதில் பனீர் துண்டுகளை சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், தேங்காய் பால், சிறதளவு கார்ன்ஃப்ளார் மாவு கரைசல் சேர்க்கவும். இவை எல்லாம் நன்றாக கொதிக்க விடவும். ஸ்வீட்கார்ன் மசாலா கிரேவி ரெடி.

முருங்கை கீரை சாப்பிட அவ்வளவாக பிடிக்காது என்பவர்கள் ஸ்வீட்கார்ன் முங்கை கீரை சேர்த்து புலாவ் செய்து பார்க்கலாம். முருங்கை கீரை ஒரு சூப்பர்ஃபுட் என்பது நாம் அறிந்ததே. வாரத்தில் இரண்டு நாள் முங்கை கீரை சாப்பிடலாம்.

முருங்கை கீரை ஸ்வீட்கார்ன் புலாவ்

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப் 

வெங்காயம் - 2

ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

முருங்கை கீரை - ஒரு கப்

தேங்காய் பால் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

சீரகம் - ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி - கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

எண்ணெய் - தேவையான அளவு 

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

பிரியாணி இலை, பட்டை, கிராம்பு - 1 

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு எல்லாம் சேர்த்து அதோடு சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பொன்னிறமாக வெங்காயம் மாறியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும். இதோடு, ஸ்வீட்கார்ன், ஆய்ந்த முருங்கைக் கீரை சேர்ர்த்து நன்றாக வதக்கவும். தேவையெனில் மிளகாய் பொடி சேர்க்கலாம். பின், அரிசி, தேங்காய் பால், அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும். ஸ்வீட்கார்ன் முருங்கை கீரை புலாவ் ரெடி. இதை செய்ய இன்னொரு முறையும் இருக்கிறது. தேங்காய் பால் சேர்க்காமல் செய்யலாம். வேக வைத்த சாதத்தோடு, தேவையான பொருட்களை வதக்கி அதோடு கலந்து விடலாம். 


 

Continues below advertisement