தேவையான பொருட்கள்:


மீல் மேக்கர் – 1 கப் (50 கிராம்
வேக வைத்தஉருளைக்கிழங்கு – 2 
பெரிய வெங்காயம் – 1
கேரட்-1 (துருவியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் 
மைதா மாவு – 2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – ½ ஸ்பூன் 
கரம் மசாலா – 1/4 ஸ்பூன் 
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் 
மல்லி தழை – சிறிதளவு
பிரெட் கிரம் – தேவையான அளவு
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை:


ஒரு கிண்ணத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து , அதில் மீல் மேக்கர் சேர்த்து , சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பின் மீல் மேக்கரை பிழிந்து, அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 


அடுப்பில் ஒரு பான் (Pan) வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து, சூடான பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து , வதக்க வேண்டும்.


வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி , அதன் பச்சை வாசனை போன பின், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.


பின் துருவிய கேரட்டை சேர்த்து கேரட் வெந்ததும், அரைத்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். அதன் பின் வேக வைத்து  மசித்த உருளை கிழங்கை சேர்த்து  நன்றாக கிளறி விட்டு அதில் சிறிது மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். 


இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்து, பின் கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும். பின் சிறிது மைதா மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.


இப்போது தயாராக உள்ள கட்லெட்டுகளை மைதா மாவில் டிப் செய்து பின் பிரெட் கிரம்சில் நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும்.


கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் , மிதமான தீயில் வைத்து கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.


அவ்வளவுதான் சுவையான, சுட சுட சோயா கட்லட் தயார். இதை புதினா சட்னி கெட்சப் உடன் வைத்து சாப்பிடலாம். 


மேலும் படிக்க 


Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் - தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக, பொறுப்பாளர்கள் நியமனம்


Nitish Kumar: உடைந்தது I.N.D.I.A. கூட்டணி..! ராஜினாமா ஏன்? - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பரபரப்பு விளக்கம்


Nitish Kumar: உடைந்தது I.N.D.I.A. கூட்டணி..! ராஜினாமா ஏன்? - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பரபரப்பு விளக்கம்