மீல் மேக்கர் என்பது சோயா துண்டுகளிருந்து செய்யப்பட்டவையாகும். சைவம் சாப்பிடுவர்கள் கோழி அல்லது ஆட்டு கறி வறுவல் போன்று சுவை மற்றும் மனம் பெறுவதற்கு இதை சாப்பிடலாம். மீல் மேக்கரின் சுவை கிட்டத்தட்ட அசைவ சுவை போல் இருக்கும். அதனால் அசைவ பிரியர்வர்கள் கூட இதை சாப்பிடுவர்.


மீல்மேக்கர்:


உணவில் மீல் மேக்கர் சேர்த்துக் கொண்டால் அது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்த குழாய்களுக்கு அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் வற்றில் இயற்கையாகவே உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், வவைட்டமின் ஏ போன்றவை கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. மீல் மேக்கரை அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த மீல் மேக்கரை அளவோடு உட்கொள்வது அனைவருக்கும் நல்லது.


தேவையான பொருள்கள்


சோயா துண்டுகள் - 1 1/4 கப்


வெங்காயம்: 2 ( சிறியதாக நறுக்கியது )


கருவேப்பிலை & கொத்தமல்லி  -சிறிதளவு


கடுகு - 1/2 டீஸ்பூன்


 பச்சை மிளகாய் - 1


இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் .


மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்


கரம் மசாலா - 1 டீஸ்பூன்


கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்


எண்ணெய்- 1 1/2 டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


தண்ணீர் - தேவையான அளவு


 கிரேவி செய்ய


தக்காளி - 2


தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை


3 கப் தண்ணீர் கொதிக்க வைத்துக்கொண்டு,அதில் சோயா போட்டு வைக்கவும். சோயா மென்மையாக வரும் வரை தண்ணீரில் வைத்து இருக்க  வேண்டும்.


பின்னர் தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் சோயாவை நன்றாக கழுவி கொள்ளவும்.


சோயா பெரியதாக இருந்தால் அதை இரண்டாக வெட்டி கொள்ளவும்.


தேங்காய் துருவல் மற்றும் தக்காளி இரண்டையும் நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.


ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில்,கடுகு , சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.


நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து , பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.


பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் மணம் மாறும் வரை வதக்கி கொள்ளவும்.


இதில் அரைத்து வைத்த தக்காளி மற்றும் தேங்காய் பேஸ்ட் இதனுடன் சேர்க்கவும்.


மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள் மூன்றையும் சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக வைக்கவும்.


இதில் சோயாவை சேர்த்து நன்றாக வேக வைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.


கிரேவி சரியான பதம் வரும் வரை வேக வைக்கவும்.


பின்னர் அதில் கொத்தமல்லி இலைகளை தூவி சூடாக பரிமாறலாம்.



சப்பாத்தி மற்றும் ரொட்டிக்கும், சாதத்துக்கும் இது பெஸ்ட் காம்பினேஷன்


மீல்மேக்கரில் பிரியாணி:


மீல்மேக்கரில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :   பாஸ்மதி அரிசி - 1 கப், மீல்மேக்கர் - 1 கப், உப்பு - தேவைக்கு, வெங்காயம் - 1, தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2, மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன், பிரிஞ்சி இலை - சிறிது, புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி, நெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன். செய்முறை : வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.   பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதையும் படியுங்கள்: உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு பாயாசம் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீல்மேக்கர், அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி. வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும். 


மீல் மேக்க வறுவல்:


தேவையான பொருட்கள்
100 கிராம்மீல் மேக்கர்
1/4 டீஸ்பூன்மஞ்சள் பொடி
1 ஸ்பூன்மிளகாய் பொடி
1 ஸ்பூன்சோம்பு பொடி
1 ஸ்பூன்கரம் மசாலா பொடி
1/2 டீஸ்பூன்பெப்பர் பொடி
தேவையான அளவுஉப்பு
1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
கொஞ்சம்கறிவேப்பிலை
3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
 


மீல் மேக்கரை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை நன்றாகப் பிழிந்து கொள்ளவும். பின்னர் அதில் மேலே சொல்லியுள்ள மசாலா பொருட்களைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து எடுக்க வேண்டியது தான்.