நாம் நம்முடைய வீட்டில் தயாரிக்கும் ஊறுகாயில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இயற்கை பொருட்களால் ஆன ஊறுகாய் வைட்டமின் கே, ஏ மற்றும் புரோபயாடிக் பாக்டீரியாவின் சிறந்த ஆதாரம். அதனால் வீட்டில் செய்யக்கூடிய சில வகை ஊறுகாய்களைப் பற்றி பார்ப்போம்.


ஸ்வீட் மேங்கோ ஊறுகாய்


ஊறுகாய் என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வருவது மாங்காய் தான். அதனால் இந்த ஸ்வீட் மேங்கோ ஊறுகாய் ட்ரை பண்ணிப் பாருங்களேன்.


தேவையான பொருட்கள்
அரை கப் துருவிய வெல்லம்
1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
1 டீஸ்பூன் மஞ்சள்
உப்பு தேவையான அளவு
1/2 டீஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
1.5 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் கடுகு
1/4 டீஸ்பூன் பெருங்காயம்
1/4 டீஸ்பூன் ஓமம்


செய்முறை


மாங்காய்களை நன்றாக கழுவிக் கொள்ளவும். துடைத்துவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் மாங்காய், வெல்லம், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.  ஒரு பேனை சூடாக்கி அதில் வெந்தயம், சிவப்பு மிளகாய் நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு ப்ளெண்டரில் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். கொரகொரவென பொடித்துக் கொள்ளவும். 


10 நிமிடங்கள் கழித்து நறுக்கிய மாங்காயை பார்த்தால் அது தண்ணீர் விட்டிருக்கும். அதை 10 முதல் 15 நிமிடங்கள் குறைந்த சூட்டில் வதக்கவும். வெல்லம் நன்றாக உருகியவுடன் அதில் மிளகாய் தூள், மிளகு மற்றும் வறுத்த மசாலாவை சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் சமைக்கவும். 10 நிமிடங்கள் பின்னர் அடுப்பை அனைத்து குளிரவிடவும். ஊறுகாய் ரெடி/
 
குண்டு மாங்காய் ஊறுகாய்


தேவையான பொருட்கள்:


மாங்காய், கடுகு, வெந்தயம், நல்லெண்ணெய், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், உப்பு, மிளகாய் தூள்.


செய்முறை:


1. முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.


2. பின்பு கடுகு மற்றும் வெந்தயத்தை கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அதை பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடியை மாங்காய் தூண்டுகளுடன் சேர்க்க வேண்டும்.


3. அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.


4. பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, காய்ந்த மிளகாய் பெருங்காய தூள் சேர்த்து தாளித்து அந்த தாளிப்பை மாங்காய் கலவையுடன் சேர்க்க வேண்டும்.


5. இதை அப்படியே மூடி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது கைப்படாமல் பக்குவமாய் பரிமாறினால் சூப்பரான டேஸ்டியான மாங்காய் ஊறுகாய்ரெடி.


 ஸ்பைஸி டேங்கி மாங்காய் ஊறுகாய்


தேவையான பொருட்கள்


2 மாங்காய்கள்
6 முதல் 7 மிளகாய் வற்றல்கள்
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் வெந்தயம்
2 முதல் 3 பல் பூண்டு
மஞ்சள் தூள்
 
செய்முறை


மாங்காயை சிறு துண்டுகளாக வெட்டி கொஞ்சம் உப்பு சேர்த்து அதை ஒரு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு 4 நாட்கள் ஒரு இடத்தில் வைத்துவிடுங்கள். 4 நாட்கள் கழித்துப் பார்த்தால் மாங்காயிலிருந்து நீர் வெளியேறியிருக்கும். இப்போது எல்லா மசாலாவை நல்ல மையான பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதை மாங்காயில் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி கடுகை பொரியவிடவும். தாளிதத்தை ஊறுகாயில் கொட்டவும். ஊறுகாய் தயார்.


துருவிய மாங்காய் ஊறுகாய்


தேவையான பொருட்கள்


3 மாங்காய்கள்
அரை கப் கடுகு எண்ணெய்
கால் டீஸ்பூன் பெருங்காயம்
3 டேபிள் ஸ்பூன் உப்பு
2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் கடுகு
ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்


செய்முறை:


மாங்காயை தோல் சீவிக் கொள்ளவும். அதை துருவிக் கொள்ளவும்.
ஒரு பேனை எடுத்து அதில் ட்ரை மசாலாவை போட்டு ரோஸ்ட் செய்யவும். அதை பொன்னிறமாக வறுக்கவும்.
இதை நன்றாக அரைக்கவும். பின்னர் மஞ்சள் கடுகும், உப்பும் சேர்த்து நன்றாக கலக்கவும்
மசாலா பொருட்களை கொரகொரவென அரைத்துக் கொள்ளவும். 
ஒரு பேனை எடுத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றவும். மிதமான சூட்டில் துருவிய மாங்காயைப் போடவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் சேர்க்கவும். அடுப்பை அனைத்து பேனில் மூடிபோட்டு மூடி ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் துருவிய மாங்காய் தயாராகிவிடும்.


5. மாங்காய் கைரி ஊறுகாய்
 
250 கிராம் கைரி
25 கிராம் இஞ்சி
25 கிராம் பச்சை மிளகாய்
2 டேபிள் ஸ்பூன் சோம்பு தூள்
1 டீஸ்பூன் கலோஞ்சி
முக்கால் கப் கடுகு எண்ணெய்


செய்முறை:


ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் எல்லா பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்
கைரியை துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதில் கொஞ்சம் இஞ்சி சேர்க்கவும். அதை நன்றாக கலக்கி கடுகு எண்ணெய் சேர்க்கவும். அவ்வளவு தான் கைரி ஊறுகாய் தயார்.