பூண்டு குழம்பு யாருக்கு பிடிக்காமல் போகும்? சூடான சாதம்; பூண்டு குழம்பு; அப்பளம். நல்ல காம்பினேசன். பூண்டு குழம்பு தயாரிக்கும் வகைகள் நிறைய இருக்கின்றன. அதில், சவுராஷ்டிரா ஸ்டைலில் பூண்டு குழம்பு எப்படி செய்து என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
உரித்த பூண்டு - ஒரு பெரிய கப் அளவு
குழம்பு மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் -ஒரு கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - 14 டீஸ்பூன்
மிளகு - டீஸ்பூன் கால் டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
பூண்டு - நாலு பல்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் 1/4 டீஸ்பூன்
செய்முறை:
புளியை ஊற வைக்கவும். பின்னர், புளி தண்ணீரில் குழம்பு மிளகாய்த்தூளை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின்பு ஒன்றாகப் போட்டு தாளிக்கவும்.
பிறகு, உரித்த பூண்டுகளை சேர்க்கவும். பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். பின்னர் அதில் தயாரித்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
சிறிது நேரத்தில், குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும். ஃப்ளேமை 'சிம்' மில் வைக்கவும். நன்கு கொதித்து, மிளகாய் பொடி வாசனை நீங்கி, எண்ணெய் பிரிந்து மேலே வரும்வரை கொதிக்க வைத்து இறக்கவும். அவ்வளவுதான். சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு தயார்.
இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் நல்ல சாய்ஸ். ருசியாக இருக்கும்.
பூண்டுக்குழம்பு வீடியோவைக் காண :
பூண்டு மருத்துவ குணங்கள்:
ஊட்டச்சத்து அதிகம், கலோரி குறைவு:
ஒரு பச்சைப் பூண்டு பல் (3 கிராம்) கொண்டுள்ள ஊட்டச்சத்து அளவு:
மான்கனீஸ் 2%
வைட்டமின் பி6 2%
வைட்டமின் சி 1%
செலீனியம் 1%
ஃபைபர் 0.06 கிராம்
இதுதவிர குறிப்பிடத்தக்க அளவில் கால்சியம், காப்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 உள்ளன. இதில் 4.5 கலோரிக்கள் உள்ளது. 0.2 கிராம் புரதம், 1 கிராம் கார்போஹைட்ரேட்ஸ் கொண்டுள்ளது.
சளியை விரட்டும் பூண்டு
பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் பூண்டு சாப்பிடக் கொடுத்து 12 வாரங்களுக்கு ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவ்வாறாக சாப்பிடவர்களுக்கு காமன் கோல்ட் எனப்படும் சளித் தொல்லை ஏற்படும் வாய்ப்பு 63% குறைவாக இருந்தது. சளியால் பாதிக்கப்பட்டவர்கள் பூண்டு சாப்பிட்டால் அவர்களுக்கு சளித் தொல்லை இருக்கும் நாட்களும் குறைந்தது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
கார்டியோ வாஸ்குலார் டிசீஸ் எனப்படும் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகளில் இருந்து பூண்டு தற்காக்கும். உயர் ரத்த அழுத்தம் தான் இந்த நோய்கள் ஏற்பட முக்கியக் காரணி. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பூண்டுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பது உறுதியாகியுள்ளது.
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்
பூண்டு எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. இதனால் இதய நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.
இதையும் படிங்க..
Moong Dal Pakoda : பாசிப்பயிறு பக்கோடா கேள்விப்பட்டிருக்கீங்களா? இதுதான் இப்போ ட்ரெண்ட்
Rava Uttapam : மை மாதிரி மாவெல்லாம் அரைக்கவேண்டாம்.. டக்குன்னு ஊத்தப்பம் செய்ய ஈஸி வழி இதோ..