ரவை என்பது,கோதுமையில் இருந்து பெறப்படும் ஒரு பொருளாகும்.இது உடனடியாக உப்புமா,ரவா லட்டு, போன்றவை செய்வதற்கு பயன்படும். சமைப்பதற்கு மிக குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் என்பது,இதன் தனிச்சிறப்பு.வட இந்தியாவில் சூஜி என்றும்,தென்னிந்தியாவில் ரவை என்றும் அழைக்கப்படுகிறது. உப்புமா ,ரவா லட்டு மட்டுமல்லாமல், காய்கறிகள் கலந்து,கிச்சடியும் ரவையில் செய்யப்படுகிறது. இதைப்போலவே ரவையைக் கொண்டு, பாயாசமும் செய்யப்படுகிறது.மேலும் ரவையில் பழங்களை சேர்த்து,முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து,சர்க்கரை பொங்கலுக்கு ஈடாக,வெல்லம் சேர்த்து,சுவையான உணவு தயாரிக்கப்படுகிறது.


கோதுமையில் இருந்து,  கிடைக்கும் எச்சம் என்று ரவையை கூறலாம்.சந்தையில் பல வகையான ரவைகள் கிடைக்கின்றன.பாம்பே ரவா அல்லது சூஜி மிகவும் பொதுவாக அறியப்பட்ட ஒன்றாகும். இது முழு கோதுமை தானியத்தில், கிரானுலேட்டட் மற்றும் சுத்திகரிக்கப்படுவதன் மூலம் கிடைக்கிறது. இது பொதுவாக, மொட்டை கோதுமை எனப்படும், ஒரு வகை கோதுமையால் ஆனது. சம்பா ரவா என்று அழைக்கப்படும் மற்றொரு வடிவம் உள்ளது.
கோதுமை மாவில் இருக்கும் தவிட்டை நீக்கி,நன்றாக அரைத்து,அந்தமாவை வெள்ளை நிறத்திற்கு வெளுக்கச் செய்து|பெறப்படுவது,மைதா எனப்படும்.இது அமெரிக்காவில் இருக்கும் அதே முறையில் தயாரிக்கப்படுகிறது.


இந்தியாவின் மேற்குப் பகுதி,வட இந்தியாவின் சில பகுதிகளில், உடைக்கப்பட்ட கோதுமையை சேகரித்து,சம்பா ரவை செய்யப்படுகிறது.இது ரவையை காட்டிலும்,உயர்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது. இது நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டாலும், மைதா மாவு அளவிற்கு பயன்பாட்டில் இல்லை. உலகம் முழுவதிலும்,ஆயிரம் வகைகளில் ரவைகள் கிடைக்கின்றன.இவற்றை உங்கள் தேவைக்கு ஏற்றவாறு வாங்கி பயன்படுத்துவது சிறப்பானது.


ரவை, இதய நலத்துக்கு, உதவக்கூடியது. இதயச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும். இதில் இரும்புச்சத்து நிறைய உள்ளது. இது ரத்த ஓட்டம் சீராக்க உதவும்.ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.சிலருக்கு ரவையிலிருக்கும் `குளூட்டன்’என்ற பசைச் சத்து ஒத்துக்கொள்ளாது. அப்படி அலர்ஜி உள்ளவர்கள் ரவா உப்புமாவைத் தவிர்ப்பதே சிறந்தது. மற்றபடி ரவா உப்புமா மிக நல்லது.ஆரோக்யமான காய்கறிகள் சேர்த்த சாம்பாருடன், தரமான சட்னியுடன் சாப்பிடும்போது சுவையுடனும் ஜீரணக் கோளாறுகள் ஏதும் இல்லாமலும் இருக்கும். அதேபோல கோதுமையை பாலீஷ் செய்து, பல கட்ட மாற்றங்களுக்குப் பிறகுதான் ரவை கிடைக்கும் என்பதால், அடிக்கடி சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. இதைச் சாப்பிடும் அளவிலும் கவனம் தேவை. அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் சற்று அதிகமாகவும், குறைந்த உடல் உழைப்பு உள்ளவர்கள் அளவாகவும் சாப்பிட வேண்டும்.


மைதா அல்லது ஆட்டா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு உணவுப் பொருள்,மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை.எனவே இதனை உண்டு வந்தால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும் . எனவே அடிக்கடி மைதா உணவுகளை உண்டு வருவதை தவிர்க்கவும்.இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. மேலும் இதனை இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர். ஆகவே மைதா சாப்பிடுவதை தவிருங்கள் ஆசைக்கு எப்போதாவது ஒருமுறை சாப்பிடலாம்.


மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால், இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும். முக்கியமாக உங்களின் இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து உங்களுக்கு இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சனைகள் ஏற்படும். எனவே அதிக அளவு மைதாவினை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.