அரிசி : நாம்தான் அரசி


உலகின் பல்வேறு இடங்களில் அரிசி தங்களது உணவுப்பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் குறிப்பாக  தென் இந்தியாவில்தான் அரிசியை அதிகமாக பயன்படுத்துகிறோம். அது பிரியாணியாக இருந்தாலும் சரி , தோசை, இட்லி , ஆப்பம் , பனியாரம் என எதுவாக இருந்தாலும் சரி.. மேஜர் ரோல் பிளே செய்வது அரிசிதான்.  உலகிலேயே அரிசியை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதில் நாம்தான் முதலிடம்.அரிசியில் நிறைய வகைகள் இருக்கிறது. அதையெல்லாம் பட்டியலிட சாத்தியமில்லை! இருந்தாலும் இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் அரிசி வகைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


பாசுமதி அரிசி:


இதனை பிரியாணி அரிசி என்றுதான் பல அழைக்கின்றனர்.  பிரியாணி என்றாலே பாஸ்மதிதான். இந்த பந்தத்தை பிரிக்கவே முடியாது. பார்ப்பதற்கு மற்ற அரிசியை காட்டிலும் சற்று நீளமாக இருக்கும். இந்த  அரிசி ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாபில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை வாங்கி பயன்படுத்தினால் நீண்ட காலத்திற்கு வீணாகாது . மற்றும் பஞ்சு போல சுவையும் அபாரமாக இருக்கும்.


மொக்ரா அரிசி:


சந்தையில் மலிவாக கிடைக்கும் அரிசிகளில்  இதுவும் ஒன்று. மோக்ரா என்றால் ஹிந்தியில் மல்லிகை என்று பொருள், இந்த அரிசியில் நறுமணம் சூப்பராக இருக்கும். இதில் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளது. மொக்ரா அரிசி  தென்னிந்தியா , வட இந்தியா என நாடு முழுவதுமே கிடைக்கிறது.


கோபிந்தபோக் அரிசி:


இது பெங்காலிகள் அதிகம் பயன்படுத்தும் அரிசி இந்த  அரிசிக்கு ஒரு தனி இடம் உண்டு. இந்த அரிசி பாசுமதி அரிசியைப் போல நீளமானதாக இருக்கது இருப்பினும், ஒரு தனித்துவமான அமைப்பு, சுவை மற்றும் வாசனை உள்ளது.




கருப்பு அரிசி:


 கருப்பு அரிசி மணிப்பூர் பகுதிகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனை அவர்கள் சக் ஹாவ் அமுபி என்று அழைக்கின்றனர். கொண்டாட்டங்கள், சடங்குகள் மற்றும் சமூக விருந்துகளின் போது உட்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டிலும் கிடைக்கிறது.


இந்திராணி அரிசி:


இந்த நெல் ரகம் மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியில் பயிரிடப்படுகிறது. இது அம்பேமோஹர் அரிசியின் கலப்பினம். சாதாரண சோறு மற்றும் வட இந்தியாவின் பிரபலமான உணவுகளான மசால் பாட், வாங்கிரி பாட் போன்றவற்றை தயாரிக்க இந்த அரிசி பயன்படுத்தப்படுகிறது.




பாலக்காடு மட்டா அரிசி :
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் விளைவிக்கப்படும் அரிசி. இதனை மட்டா அரிசி என அழைக்கின்றனர்.இந்த அரிசியை அப்பம், இட்லி, தோசை போன்றவற்றில் பயன்படுத்தலாம். சேர மற்றும் சோழ வம்சங்களின் காலத்தில் இந்த அரிசி முக்கியமான இடம் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.