எல்லோரும் சொல்லுற மாதிரிதாங்க! எடை இழப்பிற்கு உடற்பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு உணவு கட்டுப்பாடுகளும் அவசியம். சிலர் non veg என்னும் மாமிச உணவு பிரியர்களாக இருப்பீர்கள். அவர்களுக்கும் சில இறைச்சிகள் பரிந்துரைக்கப்படுகிறது. இருந்தாலும் கூட , வெவ்வேறு இறைச்சிகள் வெவ்வேறு பண்புகளைக் கொண்டுள்ளன என்பதையும், அவற்றுள் சில உடல் எடையை குறைக்க உதவாது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி உணவில் நீங்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய , சேர்த்துக்கொள்ளக்கூடாத இறைச்சிகள் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க சாப்பிட வேண்டிய இறைச்சிகள் :
சால்மன் மீன்
சால்மன் மீனில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது .மற்ற மீன் உணவுகளுடன் ஒப்பிடும் போது அதிக புரத சத்துக்கள் இருக்கின்றது. சால்மன் மீன்களை உட்கொள்வதன் மூலம், நீங்கள் நீண்ட நேரம் பசி இல்லாமல் இருக்க முடியும் மேலும் அடுத்த வேளை உணவை அளவாக சாப்பிட உதவும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தொப்பையை குறைக்க உதவுகிறது.
தோல் இல்லாத கோழி
பெரும்பாலான இறைச்சிகள் புரதச்சத்து நிறைந்தவை என்றாலும், தோல் இல்லாத கோழியின் பிரஸ்ட் பீஸை சாப்பிடுவதால், எடையை குறைக்க உதவும் புரதம் அதிகமாக கிடைக்கிறது. இது தவிர, இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது. கோழியை உண்ணும் முன் அதன் தோலை நீக்கவும், கோழி தொடையில் காணப்படும் கருமையான இறைச்சியையும் தவிர்க்கவும் .
பன்றி இறைச்சி
நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால், உங்கள் எடை இழப்பு உணவில் பன்றி இறைச்சியையும் சேர்க்கலாம். பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி சாப்ஸ் நல்ல தேர்வாக இருக்கும், ஏனெனில் அவை குறைவான கலோரிகளைக் கொண்டிருக்கின்றன, அதே நேரம் போதுமான புரதத்தை வழங்குகின்றன. பன்றி இறைச்சியை சமைக்கும்போது மறக்காமல் கொழுப்பை அகற்றவும்.
தவிர்க்க வேண்டிய இறைச்சிகள்:
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
பதப்படுத்தப்பட்ட nuggets, sausages, salami மற்றும் bacon போன்ற இறைச்சியை சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். இது சாதாரண இறைச்சிகளை விட அதிக கலோரிகள் மற்றும் அதிக நிறைவுற்ற கொழுப்பைக் கொண்டுள்ளன. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்ளும்பொழுது அதில் அதிக சோடியம் இருக்கும் . அது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த இறைச்சி:
பிரெட் துகள்களால் பூசப்பட்ட , பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கறித்துண்டுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த இறைச்சியின் கொழுப்பு மற்றும் கலோரிகளை அதிகரிக்கிறது. குறிப்பாக நீங்கள் எடை குறைய வேண்டுமென்றால் கட்டாயம் சாப்பிடக்கூடாது.