Shrikhand Recipe: நலம் தரும் நவராத்திரி; விழாக்கால ஸ்பெஷல் இனிப்பு ஸ்ரீகண்ட் செய்முறை!

Shrikhand Recipe: நவராத்தி விழாக்கால ஸ்நாக்ஸ் ஆக ஸ்ரீகண்ட் (Shrikhand) செய்வது எப்படி என்று கீழே காணலாம்.

Continues below advertisement

நவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா, துர்கா பூஜை என பல்வேறு பெயர்களில் கொண்டாடும் முறைகளில் வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்குரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் என  ஒன்பது நாள்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சில கோயில்களில் கொலு வைக்கும் பழக்கமும் உண்டு. 

Continues below advertisement

ஒன்பது மலர்கள், பழங்கள், ஒன்பது தானியங்கள், ஒன்பது பிரசாதங்கள் என ஒன்பது விதமான அலங்காரங்கள் என அம்மனை வழிபடுவர். நவராத்திரி விழாவின்போது விரத நாட்களில் வீட்டில் செய்ய இனிப்பு, நைவேத்தியம் என்ன செய்வது என தினமும் என்ன செய்வது என திட்டமிடுவது எல்லாருக்கும் எளிதானது இல்லை. நவராத்திரி விழாக்கால ஸ்நாக்ஸ் ஆக ஸ்ரீகண்ட் (Shrikhand) செய்வது எப்படி? 

என்னென்ன தேவை?

Yoghurt - 500 கிராம்

சர்க்கரை - 1/4 கி

கருப்பு ஏலக்காய் - 1/4 டீ ஸ்பூன்

பால் - 50 மி.மி.

குங்கும பூ - ஒரு சிட்டிகை

துருவிய பாதம் - அரை கப்

துருவிய பிஸ்தா - அரை கப்


செய்முறை

கடைகளில் கிடைக்கும் ப்ளைன் யோகர்ட் (Yoghurt) வாங்கிக்கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே கெட்டித் தயிர் தயாரித்து கொள்ளலாம். கருப்பு ஏலக்காயை பொடியாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கெட்டித் தயிர் / யோகர்ட் (Yoghurt)  உடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும். ஸ்மூத்தாக வந்ததும் இதோடு பொடித்த கருப்பு ஏலக்காய் பொடி, பால், குங்கும பூ சேர்த்து நன்றாக கலக்கவும். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து வெளியே எடுக்க வேண்டும். இதுதான் ஸ்ரீகண்ட் ஆகும். இதை ஜில்லுன்னு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

இதுமட்டுமின்றி நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு செய்யும் மற்ற இனிப்பு உணவுகளையும் கீழே காணலாம். 

கேரட் அல்வா

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கேரட் இனிப்பு வகைகள் வீட்டிலேயே செய்வதுண்டு. துருவிய கேரட், சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி சேர்த்து செய்தால் கேரட் அல்வா தயார்.

ஜிலேபி 

ஜிலேபி பிரபலமான இனிப்பு. கோதுமை மாவை கொண்டு தயாரிக்கப்படும் மொறு மொறு ஸ்பைரல் வடிவ ஜிலேபியை சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுப்பது. வெளியே மொறு மொறு, உள்ளே சர்க்கரையில் ஜூஸியாகவும் இருக்கும் இனிப்பு. 

காஜூ கத்லி

காஜூ கத்லி பிடிக்காதவர்களே இருக்க முடியாது எனலாம்.  முந்திரி வைத்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை. நெய், சர்க்கரை,முந்திரி இதை மூன்றையும் சேர்ந்து ருசியான காஜூ கத்லி செய்து விடலாம். 

குலாப் ஜாமூன்

யாராவது வீட்டிற்கு விருந்தினர் வந்துவிட்டால் கொஞ்சம் நேரத்தில் செய்துவிடக்கூடிய ஒன்று குலாப் ஜாமூன். கடைகளில் கிடைக்கும் குலாப் ஜாமூன் மிக்ஸ் மாவு பதத்திற்கு தயாரித்து சிறு உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்து அதை சர்க்கரை பாகில் ஊறை வைத்துவிட்டால் சுவையான குலாப் ஜாமூன் ரெடி.

ஜவ்வரிசி பாயசம்

சேமியா, பால், ஜவ்வரி, சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை வைத்து தயாரித்துவிடலாம் பாயசம். இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு சாப்பிடலாம். 

பருப்பு பாயசம், பால் பாயசம் செய்தும் அசத்தலாம். 

நட்ஸ் லட்டு

துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, பேரிட்சை பழம் என எல்லாவற்றை கலந்து நெய் சேர்த்து லட்டுபோல தயாரிக்கலாம். நட்ஸ் லட்டு ரெடி.


 

Continues below advertisement