Maggi On Weight Loss Diet:  குண்டாக இருப்பது ஆரோக்கியமின்மை இல்லை என்ற சொல்ல துவங்கியிருக்கிறது மருத்துவ உலகம். ஆனாலும், உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதவர்கள் கொஞ்சம் மெனக்கெடல்களைச் செய்ய வேண்டிதான் இருக்கிறது. உடல் எடையை குறைப்பது என்பது ஒரே இரவில் சாத்தியமில்லை. அது நாம் எட்டிப் பிடிக்கும் இலக்கும் அல்ல.  உடல் எடை குறைத்தல் என்பது ஒரு பயணம். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலும்  பின்பற்றும் டயட்டில் அவர்களுக்கு பிடித்த, ரசித்து ருசித்து சாப்பிட உணவுகள் ஏதும் இடம்பெறாது. அந்த வேதனை உடல் எடை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களே புரியும். 


எதை உண்பது? எது ஏற்கத்தக்கது? எதைத் தவிர்க்க வேண்டும்? - இப்படி பல கேள்விகள். அதற்கு கூகுளிலும், நாம் சந்திப்பவர்களிடமும் குவிந்திருக்கிறது ஏராளமான பதில்கள். சரி, ஊட்டச்சத்து நிபுணர் புதிதாக ஒரு விஷத்தை சொல்லியிருக்கிறார். கேளுங்களேன். 


எதாவது டேஸ்டியாக சாப்பிட வேண்டும்; அதுவும் இரண்டு நிமிடங்களில்.. அதேதான்.. மேகி.. உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் டயட்டில் மேகி சேர்க்கலாமா? எப்போதாவது சாப்பிடுவது சரியா? இதற்கு ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல்  வீடியோவில் பதிலளித்துள்ளார். உடல் எடையை குறைக்கும் உணவில் மேகி சாப்பிட வேண்டுமா என்பதை விளக்கும் வீடியோ, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று இக்கட்டுரையில் காணலாம்.


 இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை  பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சிம்ரத் கதுரியா ( Simrat Kathuria) பகிர்ந்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்- @simratkathuria இல் வெளியிடப்பட்ட கிளிப் 2.7 மில்லியன் பார்வைகளையும் 47.8k லைக்குகளையும் பெற்றுள்ளது.





உடல் எடை குறைக்க உதவும் டயட்டில் மேகி சேர்க்கலாமா?


உடல் எடையை குறைக்கும் பயணத்தில் அடிக்கடி மேக் சாப்பிடுது உகந்ததா? நம் குழந்தை பருவத்தில் இருந்தே விருப்பமான உணவாக மேக் இருக்கும். அது எந்த அளவுக்கு ஊட்டச்சத்து மிகுந்தது என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 


ஒரு பாக்கெட் மேகியில் 205 கலோரிகள் மற்றும் 9.9 கிராம் புரதம் உள்ளது. இதற்கிடையில், மேகியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகளின் உள்ளடக்கம் தோராயமாக 131 கிராம் ஆகும். அதனால், உடல் எடை குறைக்க முயற்சிக்கும்போது  இது எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது. ”மற்ற சிற்றுண்டிகளுடன் ஒப்பிடும்போது மேகியில் கலோரிகள் குறைவாக உள்ளன" என்று அவர் கூறினார்.




இருப்பினும், மேகி ஆரோக்கியமான உணவு இல்லை என்கிறார் கதூரியா. "இதில் வைட்டமின்கள்,  நார்ச்சத்து , தாதுக்கள் என எதுவும் இல்லை. சுவையை அதிகரிக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  இதில் அதிக கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் உப்பு உள்ளது,"  எனவே இதை தவிர்ப்பது சிறந்தது. எப்போதாவது வேண்டுமானல் உண்ணலாம்.


ஆனால், எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை தவிர்க்கலாம்.


எனவே, நீங்கள்  மேகியை சாப்பிடலாம். ஆனால் இதில் மிகக் குறைவான ஊட்டச்சத்து மட்டுமே உள்ளது என்பதை  நினைவில் கொள்ளுங்கள். அதிகபட்சமாக மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மேகி சாப்பிடலாம் என்று வரையறை செய்யுங்கள். அதற்கு மேல் ஆரோக்கியமானது அல்ல. இதோடு காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம். ஆனால், வெண்ணெய் அல்லது சீஸ் சேர்க்க வேண்டாம்“ என்று அவர் தெரிவித்துள்ளார்.






தூக்கத்தின் முக்கியத்துவம் :


உடல் எடையை குறைக்கும் பயணத்தில் சிலர் தூக்கத்தின் முக்கியத்துவத்தை மறந்து விடுகிறார்கள். உங்கள் உடலில் ஒரு இன்ச் எடை குறைய வேண்டும் என்றாலும் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்காவிடில் அது நடைபெறாது. 


உணவுமுறையில் கவனம் : 


நமது மனம் எப்பொழுதுமே நல்லதை விடவும் ஆரோக்கியமற்ற உணவு பொருட்களுக்கு தான் ஏங்க வைக்கும். அதனால் அதை தவிர்க்க வேண்டும். மேலும் எப்போதுமே உணவை மெதுவாக உண்ணுங்கள், உட்கார்ந்து பொறுமையாக சாப்பிடுங்கள், உணவுகளை கவனத்தில் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். 


கடந்த காலத்துடன் ஒப்பிடாதீர்: 


கடந்த கால அனுபவத்துடன் அல்லது மற்றவர்களின் அனுபவங்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களின் செயல்முறையை முழுமையாக அனுபவித்து உங்களின் உடல் எடை குறைப்பை ஆரோக்கியமாக எதிர்கொள்ளுங்கள்.